.

Pages

Monday, July 1, 2013

நான்கு நாட்களுக்குப்பின் அதிரையில் குடிநீர் சீராக விநியோகம் !

அதிரை நகருக்கு குடிநீர் சப்ளை அருகில் உள்ள விலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்து அதிரையில் இருக்கிற நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக மின்சார சப்ளைக் காரணமாக நீர் மூழ்கி மோட்டார் பம்ப்கள் பழுதடைந்து விட்டதால் அதிரையின் முக்கியப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தடங்கள் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாகவே அதிரை மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அதிரை பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையை மேற்கொண்டது. மோட்டார் பம்புகளில் ஏற்பட்ட பழுதுகள் அனைத்தும் சரிசெயப்பட்டு இன்று [ 01-07-2013 ] காலை 6 மணி முதல் நகரின் முக்கிய பகுதிகளுக்கு குடிநீர் சீராக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.