.

Pages

Thursday, July 25, 2013

நான்கு நாட்களுக்கு பிறகு அதிரையில் மீண்டும் குடிநீர் விநியோகம் !

அதிரை நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை அருகில் உள்ள விலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்து அதிரையில் இருக்கிற நீர் தேக்கத் தொட்டிகளில் சேமித்து வைத்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை குறிப்பாக வால்வுகளை புதிதாக மாற்றப்பட வேண்டி இருந்ததால் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டது.

மேலும் குடிநீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு ஒரு சில தன்னார்வலர்களால் டேங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வந்தன. புதிய வால்வுகள் மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் அதிரை நகரின் அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

2 comments:

  1. அதிரையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கி விட்டது. இதற்க்கு நிரந்தரத்தீர்வு கிடையாதா.?

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியருக்கு,
    தண்ணி சம்பவம் பற்றி முரன்பட்ட தகவல்கள் வருகின்றன.
    உண்மை எதுவென கழுகுப் பார்வையால் காட்டவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.