அதிரை நடுத்தெரு தக்வாப் பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 25 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களோடு சிறுவர் சிறுமிகளும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பாக குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இன்று மாலை நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்பட்ட அதிரையர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
பள்ளியில் நோன்பாளிகளுக்காக ஸஹர் உணவிற்கும் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஸஹர் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 60 முதல் 80 நபர்கள் வரை நான்கு பேர்கள் வீதம் சஹனில் அமர்ந்து பரிமாறுகின்றனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் நான்கு ஏர்கண்டிஷன்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலுக்கும் நன்றி.
ReplyDeleteRAMADHAN KAREEM