.

Pages

Thursday, July 11, 2013

விநியோகிக்கும் சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடும் பிலால் நகர் நோன்பு கஞ்சி !

பிலால் நகர் – இப்பகுதியின் வடக்கே செடியன் குளமும், தெற்கே சேது பெருவழிச்சாலையும், மேற்கே குறுகிய ரயில் [ மீட்டர் கேஜ் ] பாதையும், கிழக்கே காதிர் முகைதீன் கல்லூரியும் அமைந்துள்ளன.

இப்பகுதியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம், குடிநீர், சாலை வசதி போன்றவற்றில் பின்தங்கியிருப்பது ஒரு பெரும் குறையாக இருந்தாலும் இந்தப் பகுதியில் வியாபாரம் செய்யும் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு பெருத்த லாபத்தை அள்ளித்தந்த பகுதி என்ற சிறப்பைப் பெறுகின்றது.

அல்லாஹ்வின் பேறுதவியால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நமதூரைச் சேர்ந்த கண்ணியத்திற்குரிய சகோதரர்களின் பெரும் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்ட இந்தப்பள்ளியால் இப்பகுதி மக்கள் சிறப்படைந்து வருகின்றனர் என்பதில் ஐயமில்லை. மேலும் தனி மஹல்லா என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றது.

சரி விசயத்திற்கு வருவோம்...

புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமாகிய ரமலானில் நமதூரைச் சார்ந்த அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதோடு மட்டுமல்லாமல் நோன்பு திறக்கும் சகோதரர்களுக்கு அருந்துவதற்கும் பயன்படுத்தி வருகின்றன.



நமதூர் நோன்புக் கஞ்சி என்றாலே மிகப்பிரபலம். அந்த அளவுக்கு அதன் தனி சுவையும் மணமும் அமைந்திருக்கும். இதற்கு மேலும் மெருகூட்டுவது போல் உள்ளது பிலால் ( ரலி ) பள்ளியின் நோன்பு கஞ்சி. பொருளாதாரத்தில் பின் தங்கிய பள்ளியாக இருந்தாலும் அதிரையைச் சார்ந்த சகோதரர்கள் பலர் வாரி வழங்கும் ஹதியாவைக் கொண்டு வருடந்தோறும் புனித ரமலான் மாதத்தில் இப்பள்ளியில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி நமதூரில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும். அதிரையர்கள் மட்டுமல்ல குறிப்பாக இப்பகுதியை சுற்றியுள்ள மேலத்தெரு, கீழத்தெரு பகுதிகளைச் சார்ந்த பல சகோதர, சகோதரிகள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் பாத்திரங்களுடன் இப்பள்ளிக்கு வந்து வரிசையில் காத்திருந்து கஞ்சியை வாங்கிச் செல்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு 45 கிலோ அரிசியில் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியானது விநியோகம் செய்யும் சில நிமிடங்களில் தீர்ந்து விடுகின்றன.

குறிப்பு : பொருளாதாரத்தில் பின்தங்கிய பிலால் நகர் பள்ளியில் தினமும் விநியோகித்து வரும் நோன்பு கஞ்சிக்குரிய செலவினங்களை பகிர்ந்துகொள்ள விரும்பும் சகோதரர்கள் பிலால் நகர் பள்ளியின் நிர்வாகிகளை தொடர்புகொண்டு உதவலாம்.

2 comments:

  1. பிலால் நகர் பள்ளி கஞ்சியை டேஸ்ட் பார்க்க ஆசையாகத்தான் இருக்கு. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.
    பயனுள்ள விஷயங்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.