.

Pages

Wednesday, July 17, 2013

அபுதாபிவாழ் அதிரையர்களுக்கு அதிரை பைத்துல்மால் அமீரக கிளையின் இஃப்தார் அழைப்பு !

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் அதிரை பைத்துல்மாலுக்கு சவூதி அரேபியா (தமாம் & ரியாத்), குவைத், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கிளைகள் இருப்பதை அறிவீர்கள். ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் கடந்த எட்டாண்டுகளாக அதிரை பைத்துல்மால் கிளை செயல்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இவற்றின் தொடர்ச்சியாக அபுதாபி மற்றும் முஸஃப்பா பகுதிவாழ் அதிரைவாசிகளின் வசதிக்காக இன்ஷா அல்லாஹ் அபுதாபியிலும் ஓர் கிளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013(வெள்ளிக்கிழமை), ரமலான் பிறை 10 அன்று அபுதாபி மற்றும் சுற்றுவட்டார அதிரைவாசிகளுக்கு சகோ.ஷாகுல் அவர்களின் அபுதாபி இல்லத்தில் இஃப்தார் உபசரிப்பு மற்றும் அதிரை பைத்துல்மால் அபுதாபி கிளையின் அறிமுக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாய்ப்புள்ள சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்தார் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதால், கலந்துகொள்ள விரும்பும் அபுதாபிவாழ் அதிரைவாசிகள் சகோ.சாகுல் அவர்களின் கீழ்கண்ட தொடர்புகளில் தங்கள் வருகையை முன்கூட்டியே உறுதிபடுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செல்பேசி : 050-7824129 / 055-3370104 மின்முகவரி: ashahul@gmail.com

கடந்த 20 ஆண்டுகளாக நமதூர் ஏழை-எளிய மக்களுக்காகச் செயல்பட்டுவரும் அதிரை பைத்துல்மாலின் நீண்டகால நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு உலகெங்கிலும் வாழும் அதிரைவாசிகளின் ஆதரவைப்பெறும் நோக்கில் அபுதாபியில் பைத்துல்மால் கிளையை அமைத்து,அதிரை பைத்துல்மாலின் செயல்திட்டங்கள் தொடர்வதற்கு உங்களின் மேலான ஆதரவையும் துஆவையும் எதிர்பார்க்கிறோம்.

இவண்,
அதிரை பைத்துல்மால்
துபை கிளை நிர்வாகிகள்
பரிந்துரை : N. ஜமாலுதீன் [ அதிரைக்காரன் ]

3 comments:

  1. அபுதாபியில் பைத்துல்மால் கிளையை அமைப்பது நல்ல முயற்சி !

    இந்த முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்ல முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.