இன்று [ 14-07-2013 ] லுஹர் தொழுகைக்கு பிறகு அதிரை பெரிய ஜும்மாப்பள்ளியின் வளாகத்தில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளின் தலைமையில், TIYA வின் முன்னாள் தலைவர் K. நஜ்முதீன் மற்றும் அமீரக TIYA வின் பொருளாளர் S. அப்துல் காதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம்
இளைஞர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : B. ஜமாலுதீன்
உபதலைவர் : S. அஸ்ரப் அலி
செயலர் : N.M. சம்சுல் மன்சூர்
துணைச்செயலாளர் : ஃபிர்தெளஸ்
பொருளாளர் : ஹாஜா நசுருதீன்
இந்தக்கூட்டத்தில் மேலத்தெரு இளைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தெருவில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தெரு அமைதிக்கு எது குந்தகம் விளைவிக்குமோ அது மார்கங்களாக இருந்தாலும் தவிர்த்தல் நல்லது.
ReplyDeleteஒரு சங்கம் இருக்கும் பொழுது ஏன் அதனையே பலப்படுத்தாமல் புது சங்கங்கள் ஏற்படுத்தவேண்டும்?
இது பல தலமைகள் உண்டாகி போட்டிகளை வளர்கும் என்று பெரியவர்கள் சொல்லியுள்ளார்களே!
ஒருமுக ஒன்றிணைக்கும் ஒற்றுமை சிந்தனை வேண்டாமா?
பாரம்பரிய சுன்னத்து ஜமாத்தினர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெருவில் வஹ்ஹாபிய இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் நிர்வாக பொறுப்பில் இருப்பது என்றால் சுன்னத்து ஜமாஅத் மார்க்க வழுகாட்டுதலில் தலையீடு இல்லாமல் நிர்வாகம் செய்வார்களா? அவ்வாறு செய்தால் நலம்.
பொறுப்பில் இருப்பவர்கள் எக்காரணத்தைக்கொண்டும் மார்க்கத்தில் தலையீடு செய்யாமல் இருந்தால்தான் தெரு அமைதியாக இருக்கும்.
இலையேல் நல்லது செய்கிறோம் என்று அவர்ரவர் தங்கள் கொள்கையை புகுத்தப்பார்த்தல்...குழப்பங்கள் உண்டாகி அமைதி குலைந்துவிடும்.
அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.
அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு என்று திருக்குர்ஆன் அமைதியை வழிகாட்டுகிறது.
சங்கத்தின் நோக்கங்கள், சட்ட திட்டங்கள் வெளியிட்டால் நல்லது.
தகவலுக்கும் நன்றி.
ReplyDeleteபுதிய நிர்வாகிகளின் பனி சிறக்க என் வாழ்த்துக்களும் துவாவும்........
ReplyDelete