.

Pages

Saturday, July 13, 2013

அதிரை அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை !

அதிரை அருகே கரிசக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன் மகன் சசி  வயது 18. இவர் அதிரையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு மாணவர். கடந்த 7-ம் தேதி காலை வீட்டை விட்டுச் சென்ற சசி அன்று இரவு வரை வீடு திரும்பவில்லையாம்.

இதைத் தொடர்ந்து, பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை காலை கரிசக்காடு அருகே அலையாத்திக்காட்டிலுள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு சசி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை நடந்தது. பின்னர் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சசி தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அதிரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.