.

Pages

Monday, July 8, 2013

நன்மையை சுமந்து நம்மை நெருங்கும் மாதம்!

நம்மருகில் இன்னும் சில மணி நேரங்களில் நம்மையடைய நன்மையை சுமந்து வரவிருக்கும்... 

சிறப்புமிக்க ரமலான் மாதம்..
இறைமறையை இறைத்தூதருக்கு...
அருளிய மாதம்...

நரகவாசல் - அடைத்து..
நன்மை பெய்க்கும் மாதம்..

நல்வழியாம் நபிவழிபேண..
நல்லதொருமாதம்...

இறை வசனத்தை (அல்குர்ஆன் ) 
போட்டிபோட்டுக்கொண்டு தன் 
நாவால் உறக்கவாசித்திடும் மாதம்... 

பசிவுணர்ந்து தர்மம்...
அளித்திட வகைசெய்யும் மாதம்...

அல்லாஹ்வின் அறிவிப்பாளர்களான..
வானவர்கள் வருகைதரும் மாதம்...

ஏழைகள்  இல்லாத சமுதாயம்..
ஏக்கங்கள் இல்லாத உள்ளத்தையும்..
உருவாக்கும் மாதம்...

அல்லாஹ்..! விதித்த  கடமையை...
 நிறைக்கும்  மாதம்..

மனிதனில் உயர்ந்தவன் இல்லை..
தாழ்ந்தவன் இல்லை..
சமநிலையை  விரிவாக்கும் மாதம்...

தீமையை தடுத்து..
நன்மையை ஏவும் மாதம்...

இம்மையும் மறுமையும்..
நினைவு கூறும்  மாதம்...

மறுமைவெற்றிக்கு..
பாலமாய் இருக்கும் மாதம்...

படைத்தவனை  -அளந்தவனை..
அறிந்தவனை  ஆள்பவனை..
நிலைத்தவனை  மகிழபோற்றும்...
சிறப்புமிக்க ரமலான்  மாதம்...

ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், 
நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், 

பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், 
அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், 

சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், 
சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், 

ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், 
நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், 

குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், 
துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் 

இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.


- அதிரை தென்றல் (Irfan Cmp)

3 comments:

  1. நன்மையை சுமந்து நம்மை நெருங்கி வரும் ரமலானை நல்ல அமல்களைச் செய்து வரவேற்போம் !

    ReplyDelete
  2. இப்புனத மிகு ரமலான் மாதத்தில் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் பாவச்செயல்கள் செய்யாதவாறு பாது காத்துக்கொள்வோம்.

    நல்லமல் மற்றும் ஜகாத்,சதக்காக்கள் செய்து இறை நெருக்கத்தைப்பெருவோமாக.!

    ReplyDelete
  3. அனைவர்களுக்கும் எனது அன்பான ரமலான் நல் வாழ்த்துக்கள்.

    RAMADHAN MUBARAK
    RAMADHAN KAREEM

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.