இதில் பெரும்பாலும் அதிரைச்சகோதரர்களின் பங்கு அதிகமாக காணப்படுகிறது.நம் அதிரைச் சகோதரர்களின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் நோன்பு காலங்களில் நமதூரில் பிரசித்தி பெற்ற நோன்புக்கஞ்சியை சுவை மணத்துடன் தயாரிப்பதில் இங்குள்ளவர்களும் சளைத்தவர்களல்ல.என்று நிரூபிக்கும் வண்ணம் நமதூர்வாசிகள் சுவையுடன் தயாரிப்பதில் வல்லவர்களாகவே விளங்குகின்றனர். பெண்களுக்கு நிகராக அனைத்து சமையல் தயாரிப்புக்களையும் அறிந்தவர்களாகவும் திகழ்கின்றனர். காரணம் நீண்ட நாட்கள் நமது வாழ்க்கையை இங்கு தான் கழித்தாக வேண்டும் என்ற எழுதப்படாத ஒப்பந்தமாக தமது காலத்தை அயல் நாட்டில் கழித்து வரும் இங்குள்ளவர்களின் மனம் காசு, பணம் சம்பாரிப்பதில் மட்டுமல்ல சரீர சுகத்துடன் இருக்க வேண்டுமென்பதற்காகவே சமையலையும் சொந்தமாகவே சமைக்கக்கற்றுக்கொண்டு காலத்தின் கட்டாயமாக ஏற்றுக்கொண்டது தான் உண்மை.
நோன்புக்கஞ்சியுடன் மேலும் சொந்தமாக சுவையாக தயாரிக்கப்பட்ட கீரைபோண்டா, பஜ்ஜி,ரோஸ் மில்க் சர்பத்துடன் தர்ப்பூஸ் பழம்,ஆரஞ்சுப்பழங்களுடன் மனம் நிறைவாய் நோன்பை திறந்து மகிழ்ந்தனர்.
நமது சொந்தபந்தங்களை பிரிந்து கிடக்கும் நிலையில் இங்கு கவலைப்பட வாய்ப்பில்லாமல் சந்தோசமாக இருக்க காரணம் இத்தகைய ஷேரிங் அக்கமெண்டேசனில் ஒற்றுமையுடன் கூடி உண்று மகிழ்ந்து வாழும் ஒரு உறவு முறையேயாகும். .
அதன் ஒரு பகுதியாக தேரா துபை பிரிஜ் முரர் பகுதியில் வசிக்கும் நமது அதிரைச் சகோதரர்கள் ரூமில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியே கீழ் காணும் புகைப்படங்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
பயனுள்ள விஷயங்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அஸ்ஸலாமு அலைக்கும்....
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் நல்லதொரு ஏற்பாடு வல்லோன் இவர்களின் நோன்பை பரிபுரனமாக்குவானாக....
ஒரு நோன்பாளிக்கு இஃப்தார் செய்வித்தால் அந்நோன்பாளியின் கூலி அளவு நமக்கும் கூலி கிடைக்கும். அதேசமயம், அந்நோன்பாளியின் கூலியில் குறைவேதும் ஏற்படாது. (திர்மிதீ)
இப்புகைப்படங்களில் தேவையற்ற நிலையில் தொலைக்காட்சிகளை பார்த்து வருகிறார்கள்...அது தவிர்க்கப்பட வேண்டும்.
நோன்பு நேரங்களில் அதிகமதிகம் அல்லாஹ்விடம் கையேந்தி துஆ கேட்கும் நேரங்களில் ஒன்று இந்த இஃப்தார் (நோன்பு திறக்கப்படும்) நேரம் அல்லாஹ் அதனை ஏற்றுக்கொள்கிறான் என்று ஹதீஸ் கூறுகிறது.
இந்நேரங்களில் அதிகம் திக்ர் செய்தல் கையேந்தி அல்லாஹ்விடத்தில் நம் குறைகளை கண்ணீருடன் கொட்டித் தீர்ப்பது போன்ற அமல்களில் தன்னை முழுவதுமாக ஈடுபட வேண்டிய நேரம்.
முறையான நோன்பை இறைவனுக்காக இருந்து அதனை முழு மைப்படுத்தும் இஃப்தார் நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைக்கென்று ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது. ஆகையால், சிரத்தையோடு அந்நேரத்தில் துஆ கேட்க வேண்டும்.
ஆகையால் இந்நேரங்களில் வல்லோனிடத்தில் மன்றாடி நன்மைகளை பெற்று இத்தீய (தொலைகாட்சி பார்த்தல்) பழக்கங்களை முற்றிலும் கைவிட முனைவோம்...இன்ஷா அல்லாஹ்.
ReplyDelete///இப்புகைப்படங்களில் தேவையற்ற நிலையில் தொலைக்காட்சிகளை பார்த்து வருகிறார்கள்...அது தவிர்க்கப்பட வேண்டும்.///
அன்புச்சகோதரர் அதிரை தென்றல் (irfan cmp)அவர்களுக்கு தாங்கள் சுட்டிக்காட்டியது போல் தவறான நிகழ்ச்சிகள் பார்ப்பதற்காக டி.வி திறக்கப்படவில்லை. இஃப்தருக்கு பிறகு களைப்பாரும்போது நாட்டு நடப்புக்கள் செய்திகள் தெரிந்து கொள்ளும் நோக்கில் காணொளிப்பெட்டி திறக்கப்பட்டு இருக்கிறது. என்பதனை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.