.

Pages

Tuesday, July 2, 2013

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித்தலைமை ஆசிரியர் முஹம்மது ஹனிபா அவர்களோடு ஒரு நேர்காணல் [ காணொளி ] !

சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையல்ல. மாணவர்களுடைய அறிவுத்திறன் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதோடு அவர்களின் எதிர்காலத்தையும் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஆசிரியப் பெருமக்களே !
1. தங்களைப்பற்றி...

2. தங்களிடம் கல்வி கற்ற அன்றைய மாணவர்கள் - இன்றைய மாணவர்கள் வித்தியாசம் கூறுக...

3. பெற்றோர் - ஆசிரியர் - மாணாக்கர் ஆகியோருக்கு கூறும் அறிவுரை...

ஆகிய கேள்விகளை முன்வைத்து அதிரை நியூஸின் நேர்காணலுக்காக அதிரை காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி. N.M. முஹம்மது ஹனிபா அவர்களை அருமையானப் பொழுதில் அவர்களின் இல்லத்தில் சந்தித்து  கருத்தைப்பெற்றோம்.

ஹாஜி N.M. முஹம்மது ஹனிபா அவர்களைப்பற்றிய சிறுகுறிப்பு :
கடந்த 1961-63 ஆம் ஆண்டில் ஆசிரியப் பயிற்சியை முடித்தவுடன் தான் பிறந்த ஊரில் உள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்து பின்னர் 1999 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர்.

தற்போது நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தில் பொறுப்பில் இருக்கும் இவர் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக 'பள்ளிக்கல்வி புரவலர் பட்டயத்தை' அன்றைய கல்வி அமைச்சரிடம் பெற்றவர்.

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    ஜனாப் ஹனிபா சார் அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நாங்களெல்லாம் அவரிடம் படித்த பழைய மாணவன் என்ற பெருமை உண்டு.

    அவர்களோடு மாணவனாக இருந்த காலங்களை மறக்க முடியாது. காரணம் எங்கள் மாணவப் பருவம் அறுசுவை கலந்ததாக இருந்தது. அன்றைய ஆசிரியர்மார்களும் அறுசுவை கலந்ததோடு எங்களை நடத்துவார்கள். இதுதான் எல்லா நிலையிலும் எங்களை வெற்றி அடையச் செய்தது.


    சார் உங்களின் கருத்து மிகவும் அருமையாக இருக்கின்றது, நான் உங்களிடம் படித்த மாணவன் என்ற அடிப்படையில் இன்றும் உங்களை பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. அவ்வப்போது உங்களை சந்திக்க நேரிட்டாலும் கேமிரா முன்பு நீங்கள் தோன்றியது இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன்.

    ஹனிபா ஸார் எடுத்த கணக்குப் பாடத்தை மறக்க முடியுமா ? அருமையாக விளக்கக்கூடியவர்.

    உங்களின் ஓய்வு காலம் நல்லவையாக அமைய இறைவனிடம் பிராத்திக்கிறேன் ஸார்

    உங்கள் முன்னாள் மாணவன்,
    சேக்கனா நிஜாம்

    ReplyDelete
  3. நலமா சார்

    சாரை பார்த்து ரொம்ப நாளாச்சு. பாடம் எடுக்கும் பொழுது Because ன்னு அடிகடி சொல்லுவிங்களே அதே மறக்கவே முடியாதுங்க

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய ஹனிபா சார் அவர்களை மறக்க முடியாது. அவர்கள் பணியில் சேர்ந்த புதிதில் முதல் வரிசையில் ஆசிரியரின் இருக்கைக்கு நேரான மாணவர் வரிசையில் இருந்த ஒரு மாணவன் நான். என்னுடைய ஒரு வகுப்புத்தோழர் சார் அவர்களின் மைத்துனர். அவரை நாங்கள் கிண்டல் செய்வோம். உன்னிடம் சார் கேள்வி கேட்கமாட்டார். கேட்டால் உன் ராத்தாவிடம் சொல்லிக் கொடுத்துவிடுவே என்று.

    ஒரு மாணவரை போ நீ போ நீ என்று கோபமாக சொன்னார். துடுக்கான அந்த மாணவர் போனி அல்ல சார் டப்பா என்று சொன்னது இன்னும் சிரிப்பு வருகிறது.

    நட்புடன் பழகும் அன்பான இளைய ஹனிபா சாரையே என் நினைவு சேமித்து வைத்து இருக்கிறது. அண்மையில் சந்திக்க இயலவில்லை என்பது ஒரு வருத்தம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.