தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள். சொகுசாக செல்ல ஆசைப்படுவார்கள் அக்கம் பக்கத்தில் நெருக்கமாக இருப்பது அல்லது அதிகமான உடமைகளை கொண்டு செல்வது போன்ற காரணத்தால் தனியாக வாடகை வாகனம் எடுத்து செல்வதை நம்மவர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது பாதுகாப்பனதும் மன அமைதியை தரும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் செல்லத் தேர்ந்தெடுக்கும் வாகனம் நமக்கு பாதுகாப்பான வாகனமாய் இருக்க வேண்டும். இதனை அதிகமானோர் மனதில் கொள்வதில்லை. வாடகைத் தொகை குறைவு என்ற ஒரே காரணத்திற்காக ஆட்டோ என்ற வாகனத்தை தேர்ந்தெடுத்து தன் உடமையையும் உயிரையும் மாய்த்து கொள்கின்றனர்.
* ஊருக்குள் ஒரு தெருவில் இருந்து மற்ற தெருவிற்கு செல்ல மட்டுமே. உதவும் சிறு வாகனம் மூலம் நீண்ட தூர பயணம் செய்வது அறிவீனமே.
* பெரும்பாலன ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன சட்டம் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
* மேலும் ஹைவே ரோடுகளில் எப்படி வாகனத்தை இயக்குவது என்பதை அறியாதவர்கள்.
* முறையாக ஒட்டனர் பயிற்சி எடுக்காமல் நண்பர்கள் மூலம் ஆட்டோ ஓட்டும் பயிற்சி பெற்று அன்பர்களால் பல உயிர் சேதம் ஏற்படுகிறது.
* அதிவேக வாகனத்திற்கு நிகராக குறை வேக வாகனத்தை இயக்குவது அறிவீனம்.
* பம்பாய் போன்ற நகரங்களில் கனரக வாகனம் நடமாடும் இடங்களில் ஆட்டோ அனுமதி இல்லை .அந்தேரி போன்ற புறநகரில் மட்டுமே அனுமதி.
* ஆட்டோவின் வேகம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்வது அபாயம். ஆனால் ஓட்டுனரோ அதில் பயணிக்கும் பயணியோ அறிவதில்லை.
* இட நெருக்கமான் ஆட்டோவில் நீண்ட தூரம் பயணிப்பதை விட பேருந்தில் செல்வதே மேல். ஆட்டோவில் கதவு வசதி இல்லை சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு நெடுந்தூர பயணம் ஆபத்தானது.
* கார்களில் முறையான ஓட்டுனர் பயிற்சி பெற்ற ஓட்டுனர்களை கொண்டு நீண்ட தூர பயணம் செய்யுங்கள்.
* லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் பயணிக்கும் சாலைகளில் ஆட்டோவில் நீண்ட தூரம் பயணிக்காதீர்கள்.
தொலைதூரங்களுக்கு செல்வதை தவிர்த்து நகரில் மட்டுமே ஆட்டோவில் பயணிப்பது அறிவான செயல் !
அதிரை சித்திக்
குறிப்பு : சமீபத்தில் அதிரையில் நடந்த மிகப்பெறும் விபத்திற்கு காரணமாக அமைந்த ஆட்டோவினால் ஏற்பட்ட ஆதங்கம் தலையங்கமாக தளத்தில் பதியப்பட்டுள்ளது.
சரியாகத் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது !
ReplyDeleteஉள்ளூருக்கு பயன்படுத்தப்பட வேண்டியவற்றை அயலூர் பயணத்துக்கும் பயன்படுத்துவது ஆபத்தானது.
குறிப்பாக நோன்பு காலங்களில் சகோதர சகோதரிகள் வெளியூர்களுக்கு பர்சேஷ்க்காக செல்லுகின்ற ஆட்டோ சவாரியை பாதுகாப்பானதாக ஆக்கிகொள்வோம்.
குறிப்பாக நோன்பு காலங்களில் சகோதர சகோதரிகள் வெளியூர்களுக்கு பர்சேஷ்க்காக செல்வதை தவிர்த்துகொள்வதே சிரந்தது...
ReplyDeleteசிந்திப்பீர் நம் ஊரில் இல்லாத பொருள்களா வெளியூரி கிடைக்கிறது தேவையில்லாத பயணங்களையும், பெண்கள் மகரமில்லாத பாதுகாப்புயற்ற பயணங்களை தவிர்ப்பதே சால சிரந்தது.
அனைவரும் அறிய வேண்டிய நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.
ReplyDeleteஆட்டோவில் நீண்டதூரப்பயணம் ஆபத்தானதே. முடிந்தமட்டில் தவிர்த்துக்கொள்வது நல்லது அப்படி பயணிக்கும் சூழ்நிலை வந்தாலும் ஆட்டோ ஒட்டினரிடம் வேகத்தை குறைத்து நிதானித்து போக சொல்லி பயணிகள் அறிவுறுத்தவேண்டும்.
பயணிப்பவர்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டால் விபத்தினை தவிர்க்கலாம்.
ஆட்டோவில் நீண்டதூரப்பயணம் ஆபத்தானதே. முடிந்தமட்டில் தவிர்த்துக்கொள்வது நல்லது அப்படி பயணிக்கும் சூழ்நிலை வந்தாலும் ஆட்டோ ஒட்டினரிடம் வேகத்தை குறைத்து நிதானித்து போக சொல்லி பயணிகள் அறிவுறுத்தவேண்டும்.
ReplyDeleteபயணிப்பவர்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டால் விபத்தினை தவிர்க்கலாம்.