.

Pages

Tuesday, July 23, 2013

தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் மனிதநேயப் பணி !

நாகப்பட்டினத்தில் இருந்து மீன் லோடு ஏற்றி வந்த மினி லாரி பிலால் நகர் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தை கடந்து செல்லும் போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் இரு சக்கர வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியதுடன் அதில் பயணம் செய்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து முதலுதவி செய்தனர். மேலும் விரைவாக ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இரவு 1 மணிக்கு  சம்பவம் நடந்த இடத்திற்கு லாரியின் உரிமையாளர் வந்தார் கவிழ்நத லாரியில் சுமார் ரூ 4 லட்சம் மதிப்புள்ளான மீன்கள் இருப்பதாகவும் அதனை உடனே வேறு வாகனத்தில் மாற்றாவிட்டால் அனைத்து மீன்களும் கெட்டுப்போகிவிடும் என்று கூறினார் இதை கேட்டவுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் களத்தில் இறங்கி அவர்களுடன் சேர்ந்து அவர்கள் கொண்டு வந்த மாற்று வாகனத்தில் ஏற்றுவதற்கு அனைத்து உதவிகளும் செய்தனர். கடைசியாக உரிமையாளர் செல்லும் போது காசு கொடுத்தாலும் இந்த நேரத்தில் யாரும் வராதபோது தானாக முன் வந்து நீங்கள் செய்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று தவ்ஹீத் ஜமாத்தினரிடம் நன்றியை சொல்லிவிட்டு சென்றார்கள்.





6 comments:

  1. விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஓடோடி வந்து உதவிய அதிரை நகர மக்கள் மற்றும் அதிரை தவ்ஹீத் ஜமாத்தினர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

    நமது மக்கள் பிறமத சகோதரர்களுக்கு என்றென்றும் உதவுவர்களாக இருக்கிறார்கள். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

    அனைவருக்கும் நன்றி !

    ReplyDelete
  2. இதுபோன்ற விபத்துக்கள் மற்ற ஊர்களில் நடந்தால் 1 மணி நேரத்தில் லாரியில் இருந்த அனைத்து பொருள்களும் காணாமல் போகியிருக்கும் இந்த விபத்து நடந்த இடத்தில் யாரும் எந்த பொருள்களை எடுக்கவில்லை என்பது அதிரைக்கு கிடைத்த பெறுமை

    ReplyDelete
  3. சிறுபான்மையினரானாலும் பெரும்பான்மை மனம் படைத்தவர்கள் நாங்கள் என்று நிருபித்துவிட்டார்கள் நம் சகோதரர்கள். இதை விட மதனல்லினக்கத்திற்க்கு வேறு என்ன செய்ய முடியும்.

    வாழ்த்துக்கள் சகோதரர்களே.!

    ReplyDelete
  4. தக்க நேரத்தில் உதவி செய்த அணைத்து சகோதரர்களுக்கும் வல்ல ரஹ்மான் நற்கூலி செய்வானாக ஆமீன் இதை விட மதனல்லினக்கத்திற்க்கு வேறு என்ன செய்ய முடியும்.

    ReplyDelete
  5. இதைத்தானே இஸ்லாம் போதிக்கின்றது
    அதுதான் நமக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்

    இப்படிப்பட்ட நமது நடைமுறைகளை கண்டாவது அவர்களுக்கு பிடித்திருக்கும் RSS சாத்தான் சாமானிய ஹிந்து சகோதரர்களை விட்டு ஓடட்டும்

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.