.

Pages

Sunday, July 7, 2013

அதிரை சேதுபெருவழிச்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் PWD அலுவலகர்களால் அதிரடி ஆய்வு !

அதிரை பேருந்து நிலையம் மற்றும் சேதுபெருவழிச்சாலையை ஒட்டிய பகுதிகளில் இருக்கின்ற பெரும்பாலான கடைகள் தங்களுக்கு சொந்தமான இடத்தை தவிர சுமார் 2 முதல் 5 அடி வரை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவது மாமூலாக காணப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதிகளில் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வந்தது.
கடந்த [ 28-12-2012 ] அன்று ஆக்கிரமிப்புகள் தொடர்பாக தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையினரும், கிராம நிர்வாகிகளும் போலீஸாரின் ஒத்துழைப்போடு சாலைகளை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை JCB இயந்திரம் மூலம் அகற்றினர். குறிப்பாக கடைகளுக்கு முன்பு இருந்த கீற்று கொட்டகை, ஆஸ்பெட்டாஸ் சீட்டு, தடுப்பு பலகைகள், விளம்பர போர்டுகள் ஆகியவை அகற்றப்பட்டன. பெரும்பாலான கடைகளின் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு முன்பிருந்த  ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி நெடுஞ்சாலைத் துறையினருக்கு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். அன்றைய தினம் நெடுஞ்சாலைத் துறையினரால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தது.



அன்றைய தினம் நெடுஞ்சாலைத் துறையினரிடம் கால அவகாசத்தை பெற்ற ஆக்கிரமிப்பாளர்களின் சிலர் தங்கள் கடைகள் மற்றும் வீடுகளுக்கு முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலதாமதப்படுத்தி வந்ததால் நேற்று முன்தினம் அதிரை சேதுபெருவழிச்சாலை பகுதிகளில் PWD அலுவலர்கள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பெயின்டால் குறியீடும் செய்துவிட்டுச் சென்றுனர். இதனால் ஆக்கிரமிப்பாளர்களின் மத்தியில் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் குறியீடு செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகள் JCP இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்கிரமிப்பு மீண்டும் நடைபெறமால் இருக்க அதிரை பேருந்து நிலையம் அருகில் சேது பெருவழிச்சாலையில் பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஒரு சில நாள்களிலேயே ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் அதே இடத்தில் கடைகளை விரிப்பதை நிரந்தரமாக தடுக்கும் நோக்கில் காவல்துறை மற்றும் உள்ளாட்சியின் கண்காணிப்பு எப்போதும் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.