.

Pages

Wednesday, July 10, 2013

'அதிரை நியூஸ்' வாசக நேசங்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்கள் !

உலகெங்குமுள்ள வாசக நேசங்களுக்கு 'அதிரை நியூஸ்'ஸின் இனிய ரமலான் வாழ்த்துக்கள் !

இனிய மாலை நேரம் !

இஸ்லாமிய இதயங்கள் 
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
பொன்னேரம்!

புதிய இளைய முதற்பிறை 
எழில் வானத்தில் 
கோலம் வரையக் 
காத்திருக்கும் நேரம்!

சுவனத்தின் தென்றல் 
ஒருமாத காலம் பூமியை 
வலம்வரும் நேரம்!

கொடுமைகள் - வன்மைகள் 
தீமைகள் -பகைமை நரகச் சூடுகள் 
மாண்டழியும் நேரம்!

அலையும் மன சாத்தான்கள் 
காட்டப்படும் நேரம் !

இந்த பூலோகம் எங்கணும் 
இறைப்புகழிலும் 
நபிப் புகழிலும் 
நிறையும் நேரம்!

ஒளுவின் துளிகளில் 
உண்மைகள் உயிர்க்கும் நேரம்!

அருள்மறை மொழிகளில் 
உலகம் குளிக்கும் நேரம்!

சலவாத்துக்களில் 
சந்தோசம் கொள்ளும் நேரம்!

தராவீ ஹ் தவங்களில் 
பள்ளிவாயில்கள் 
அலங்கரிக்கப்படும் நேரம்!

வா வா ரமலானே!
வந்து எங்களை நேர்படுத்து 
இடையில் கொஞ்சம் 
வளைந்து போன
நெஞ்சங்களச் சீர்படுத்து!

இனிய ரமலான் வாழ்த்துகள்!

Poem : Fakir Mohamed
Special Thanks : Bro. BaNaSar [ Designer ]

9 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    சந்தோஷமான செய்தி.

    இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. ASSLAMU ALIKUM இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அனைவர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    ரமலான் மாதத்தை நல்ல அமல் கொண்டு நிரப்புவோமாக.!

    ReplyDelete
  4. ஜசக்கல்லாஹ் ஹைர்...தாங்களுக்கும் அ.நி யின் குழுவிற்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள்

    அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனின் அருளையும் பிழைபொறுப்பையும் தந்து, சுவர்க்கத்தில் நுழையும் வாய்ப்பையும் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பையும் தந்தருள்வானாக!

    ReplyDelete
  5. இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அனைத்து உள்ளங்களுக்கும் என் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அனைவர்களுக்கும் எனது இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.