.

Pages

Friday, July 5, 2013

புனித ரமலான மாத நோன்பு கஞ்சிக்கு அரசின் மானிய விலை அரிசியைப்பெற அதிரையின் அனைத்து பள்ளிவாசல்கள் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டது !

புனித ரமலான் மாத நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு முறையாக அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம்  அரசால் மானிய விலையில் பச்சரிசியைப் பெற்றுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களின் பொறுப்புகளில் இதற்குரிய பணிகள் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகின்றன. அதன்படி இந்த வருடம் 4000 டன்கள் பச்சரிசியை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகள் மூலம் விநியோகம் செய்ய தமிழக முதலமைச்சர் அவர்களால் உத்தரவு விடப்பட்டுள்ளது.

அரசின் மானிய விலை அரிசியைப் பெறுவதற்காக  அதிரையில் உள்ள மொத்தம் 31 பள்ளிவாசல்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை வருடம்தோறும் முன்னின்று கவனித்து வரும் பிலால் நகர் மஸ்ஜித்தின் முத்தவல்லி S.M.A. அஹமது கபீர் அவர்களிடம் இதுகுறித்து பேசியவகையில்...

அரசால் நிர்ணயம் செய்துள்ள பச்சரிசியின் விலை கிலோ ஓன்றுக்கு ரூபாய் 1/- வீதம் அரசிற்கு செலுத்தப்பட வேண்டும். மேலும் பச்சரிசியை ஏற்றி வருகிற வாகனங்களுக்குரிய வாடகைத் தொகையினையும் நாமே செலுத்த வேண்டும் என்றார்.

நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கூடுதலாக அரிசியை வழங்க வேண்டும் என்றும், மேலும் கால தாமதத்தை தவிர்த்து ரமலான் மாத நோன்பு ஆரம்பிக்கும் முன்பே ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் அரசின் செலவிலேயே வாகனங்கள் மூலம் அரிசியை விநியோகம் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அரசு கவனத்தில் கொள்ளுமா !?

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. நோன்பு ஆரம்பமாக இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் கூடுதலாக அரிசியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்கூட்டியே அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இருக்கலாம்.

    மீண்டும் காலம் தாழ்த்தாமல் அரசு உடனே இதை கவனத்தில் எடுத்து செயல்பட அது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி முறையிடுவது நல்லது.

    ReplyDelete
  3. சாராயத்தில் வருமானம் பெரும் அரசிடம் இருந்து மானியத்தில் புனித ராமளார் இப்தார் உணவுக்கு அரிசி பெறுவது சரியா மற்றும் தரமான அரிசியா எனது கேள்வி சரியா பதிலுக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.