.

Pages

Saturday, July 6, 2013

அமீரகத்தில் நடைபெற்ற தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் !

அமீரகத்தில் நேற்று  [ 05.07.2013 ] வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணியளவில் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் [ TIYA ] பொதுக்குழுக்கூட்டம், TIYA வின் தலைவர் N. முகமது மாலிக் அவர்களின் தலைமையிலும் மற்றும் ஏனைய நிர்வாகிகளின் முன்னிலையில் இனிதே துவங்கியது.



கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :
தாஜுல் இஸ்லாம் சங்கம் தலைமை நிர்வாகிகளிடமிருந்து அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்திற்க்கு வந்த கோரிக்கை அடங்கிய கடிதம் இப்பொதுக்குழுவில் எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது.

அதன்படி,

1. நமது  பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளியில் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குறிப்பாக தொழுகை மற்றும் திங்கள் தோறும மவ்லவி ஹைதர் அலி அவர்களால் நடைபெற்று வரும் பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டத்திற்கு போதுமான இட வசதியை ஏற்படுத்தும் விதமாக பள்ளியின் மேல் பகுதியில் கூரை அமைப்பது என பள்ளியின் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு அதற்குரிய செலவீனங்களின் குறிப்பிட்ட பகுதியை  தாஜுல் இஸ்லாம் சங்கம் தலைமையகமும் மற்றும் அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கமும் இணைந்து பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை பொதுக்குழுவில் ஏற்றுக்கொண்டு நமது பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளியின் நிர்வாகத்தால்  நிர்ணயிக்கபட்ட தொகையை மஹல்லாவாசிகளிடம் வசூல் செய்து அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

2.  நமது மஹல்லாவைச் சார்ந்த ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்காக TIYA வின் பங்களிப்போடு சகோ. சிவப்பு தொப்பி சாகுல் ஹமீத் அவர்களின் பெரும் முயற்சியால் வசூல் செய்யப்பட்ட தொகை ரூபாய் 95,750/- த்தை தாயக தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கட்டப்பட்ட வீட்டின் சில பணிகள் பாக்கி உள்ளதால், மீதமுள்ள பணிகளுக்குரிய தொகையை TIYA வின் பங்களிப்போடு மீண்டும் வசூல் செய்ய சகோ. சிவப்பு தொப்பி சாகுல் ஹமீத் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.

3. TIYA வின் சார்பாக எதிர்வரும் ரமலான் மாதத்தின் ஏதாவது ஒரு தினத்தில் இப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது என்றும், அதில் அமீரகத்தில் உள்ள நமது மஹல்லாவாசிகள் அனைவரையும் சந்திக்க ஏற்பாடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இவற்றை செயல்படுத்துவது தொடர்பாக நிர்வாகக்குழுவும், ஆலோசனைக்குழுவும் ஒன்றிணைந்து ஆலோசிப்பது என முடிவு செய்யப்பட்டது.

4. அமீரகத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் நமது மஹல்லாவாசிகளின் நலன் கருதி வட்டியில்ல கடன் திட்டத்தை இந்த ஆண்டு முதல் அமீரகத்தில் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

5. ரமலான் மாத பித்ரா வசூலை முன்கூட்டியே வசூல் செய்து அவற்றை ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு முறையாக விநியோகிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

6. பொதுக்குழுக் கூட்டம் துஆவுடன் இனிதே நிறைவுற்றது.

என்றும் அன்புடன்,
அமீரக TIYA நிர்வாகம்
துபை

நன்றி : TIYA

5 comments:

  1. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் அருமை. அவசியமானவை.

    தீர்மானங்கள் நிறைவேறிட துவாவுடன் வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் அருமை. அவசியமானவை.

    தீர்மானங்கள் நிறைவேறிட துவாவுடன் வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  4. asslamu alaikum

    useless தீர்மானங்கள் all. there is no any new step for adirai west street poor family's. please first strong your tiya team in west street ( headquarters ) then arrange your meeting in Dubai and get donation from adirai west people . don't keep people funds in the bank locker.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.