.

Pages

Friday, July 12, 2013

அமீரகம் துபையில் உள்ள குவைத் பள்ளியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ! [புகைப்படத்துடன் ஒரு பார்வை]

குவைத் பள்ளி (MASJID KUWAIT LOOTAH MASQUE) என்றழைக்கப்படும் இப்பள்ளி வாசலை துபை மற்றும் ஏனைய அமீரகப்பிரதேசத்தில் உள்ள நமதூர்வாசிகள் மற்றும் நமது தமிழ் சகோதரர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.காரணம் பெரும்பாலான தமிழர்கள் தொழுகைக்காகவும், நோன்பு திறப்பதற்க்காகவும் இப்பள்ளிவாசலைத்தான் நாடி வருவார்கள்.

டேரா துபை தமிழ் பஜார் என்றழைக்கப்படுகிற நம் தமிழ்ச்சொந்தங்கள் பரபரப்புடன் அதிகம் நடமாடும் சிக்கத் அல் ஹைல் ரோட்டிற்கு மேற்ப்புறம் நோக்கியவாறும்,முற்ஸித் பஜார், கோல்டு பஜார்க்கு (dubai gold souk) கீழ்புறத்திலும் மக்கள் நடமாட்டம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மெயின் பஜாரில் அமைதி சூழ அழகான கட்டமைப்பில் அமைந்துள்ளது குவைத் பள்ளியெனும் ''மஸ்ஜித் குவைத் லூத்தாஹ் மாஸ்க்''.

இப்பள்ளியின் தனிச்சிறப்பு என்னவெனில் நோன்பு மாதத்தில் நோன்பு திறக்க வழங்கப்படும் இப்தார் உணவு நமது ஊர் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல இங்கு நோன்புக்கஞ்சி, வடை சமூசா, ஆரஞ்சுப்பழம், பேரித்தம்பழம் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படுகிறது. நோன்பு திறக்க தேவையான போதுமான உணவு வழங்கப்படுவதால் ஏனைய மாதத்தை விட நோன்பு மாதங்களில் இங்கு கூட்டம் நிரம்பி வழியும். தினமும் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் வரை இந்தப்பள்ளிக்கு வந்து நோன்பு திறந்து விட்டுச் செல்கின்றனர்.

அடுத்து சொல்லப்போனால் நீண்ட நாட்களாக தமிழ் நாட்டைச்சார்ந்த நம் சகோதரர் தான் இப்பள்ளி வாசல் இமாமாக இருந்தார்கள். அதனால் அடிக்கடி தமிழில் பயான், தமிழில் மார்க்க சொற்ப்பொழிவு என்று இங்கு அடிக்கடி தமிழில் மார்க்க விளக்கக்கூட்டம் நடை பெற்று வந்தன. ஆகவே நம்மக்கள் அதிகமாக இப்பள்ளியில் காணப்படுவார்கள்.

இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்பள்ளி வாசலுக்கு துபையில் பிரசித்திபெற்ற பெரிய நிறுவனங்களில் ஒன்றான அஸ்கான் (ASCON & ETA) என்றழைக்கப்படும் நம் தமிழ் நாட்டு கம்பெனி நிறுவனர்களாலும் மற்றும் துபாய் ஈமான் சங்க நிறுவனர்களாலும் ஒருங்கிணைந்து இந்த நோன்பின் இப்தார் உணவை வருடம் தவறாமல் நோன்பு முப்பது தினங்களுக்கும் சுமார் ஆயிரத்து ஐநூறு முதல் இரண்டாயிரம் பேருக்கான உணவை தயார் செய்வதுடன் அதனை முறையாக பரிமாறி   சிறப்புடன் வழங்கி வருகிறார்கள். இவர்களது இந்த பொது நலச்சேவையை இவ்வேளையில் நினைவு கூறாமல் இருக்கமுடியாது.

அவர்களது இச்சேவை இனிவரும் எல்லா வருடங்களிலும் தொடர்ந்து நடந்திட அல்லாஹ்விடத்தில் துவாச்செய்வோமாக.!














 
 புகைப்படம் & செய்தித்தொகுப்பு அதிரை நியூஸிற்காக துபையிலிருந்து அதிரை மெய்சா       

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.
    பயனுள்ள விஷயங்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.