.

Pages

Thursday, July 4, 2013

அதிரை பேரூந்து நிலையம் அருகே ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்ப்பு !

இன்று [ 04-07-2013 ] இரவு 7 மணியளவில் அதிரை பேரூந்து நிலையம் அருகே ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சேது பெருவழிச்சாலையில் அதிரைப் பேரூராட்சி அலுவலத்திற்கு எதிரே செல்லும் பிரதான மின்கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து தொங்கியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.  தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து அவ்வழியே செல்லும் வாகனங்களையும் பொதுமக்களையும் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தினர்.

அதன் பிறகு வந்த அதிரை மின்சார வாரிய ஊழியர்கள் அறுந்து தொங்கிய மின்கம்பியை சரிசெய்தனர்.  இதனால் இப்பகுதி முழுவதும் சுமார்  ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்பகுதியில் நிகழ இருந்து பெரும் விபத்து துரித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது.




3 comments:

  1. நமதூரில் அநேக பகுதிகளில் மின்கம்பி பழுதடைந்த நிலையில் தான் உள்ளது. அதனை மின்வாரியம் கவனத்தில் எடுத்து அனைத்துப்பகுதிகளிலும் சோதித்து மின்கம்பியை மாற்றினால் ரொம்ப புண்ணியமாக இருக்கும்.

    ReplyDelete
  2. நமதூரில் அநேக பகுதிகளில் மின்கம்பி பழுதடைந்த நிலையில் தான் உள்ளது. அதனை மின்வாரியம் கவனத்தில் எடுத்து அனைத்துப்பகுதிகளிலும் சோதித்து மின்கம்பியை மாற்றினால் ரொம்ப புண்ணியமாக இருக்கும்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.