அபுதாபிவாழ் அதிரையர்களுக்கான நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி அய்மான் அமைப்பின் தலைவர் சகோ.சாகுல் அவர்களது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அபுதாபி, முஸஃபா ஆகிய பகுதிகளிலிருந்து அதிரையர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி நிரல்:
7:15 - இஃப்தார்
7:30 - மஃரிப் தொழுகை
7:45 - விருந்தினர் சுயஅறிமுகம்
8:00 - பைத்துல்மாலின் அவசியம் மற்றும் அறிமுகம் - சகோ. S.M.A.ஷாகுல்
8:15 - அபுதாபி & முஸஃபா கிளை முதன்மை நிர்வாகிகள் தேர்வு
8:45 - நன்றியுரை - சகோ.சபீர் (ABM துபை கிளை - கெளரவ ஆலோசகர்)
நிகழ்ச்சிக்கு துபாய் மற்றும் அபுதாபி மற்றும் முஸஃபா பகுதியிலிருந்து அதிரையர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். மேலும், திருவண்ணாமலை சமூக சேவகர் சகோ.அப்துல் ஜலீல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கீழ்கண்ட முதன்மை நிர்வாகிகள் கலந்து கொண்டவர்களால் முன்மொழியப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்கள்.
கெளரவ ஆலோசகர் - சகோ.ஷாகுல் [ தலைவர், அய்மான் ] -(050-7824129)
தலைவர் - 'கவியன்பன்' அபுல் கலாம் (056-7822844)
துணை தலைவர் - சகோ.அப்துல் மாலிக் [NPCC] - (050-7914780)
செயலர் (அபுதாபி) - சகோ.பைஸல் (050-9431868)
செயலர் (முஸஃபா) - சகோ.அப்துல் ஜலீல் (050-7940545)
பொருளர் - சகோ.மொய்தீன் (050-8488667)
அபுதாபி & முஸஃபா கிளை முதன்மை நிர்வாகிகள்
கலந்து கொண்டவர்களிடம் உறுப்பினர் படிவம் விநியோகிக்கப்பட்டது. துபாய் மற்றும் அபுதாபி பைத்துல்மால் கிளைகள் மூலம் ஃபித்ரா, ஜகாத் மற்றும் ஸதகா தர்மங்களை வசூலித்து அதிரை பைத்துல்மாலுக்கு அனுப்பி வைப்பது என்றும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று உறுப்பினர்களின் மாதாந்திர அமர்வு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இஃப்தார் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்த சகோ.ஷாகுல் அவர்களுக்கு பைத்துல்மால் துபை கிளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு இனிதே நிறைவுற்றது.
தகவல் & புகைப்படம் : சகோ.N.ஜமாலுதீன் (ABM துபை கிளை செயலர்)
நம்மவர்களை நல்லதொரு சிறப்பான நிகழ்ச்சியின் மூலம் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகலுக்கும் என் வாழ்த்துக்கள்.
பைத்துல்மால் அபுதாபி கிளைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் துவாவும்.சமுதாய சேவைகளில் சிகரம் தொட்ட அதிரையர்களின் உழைப்பிலும் பங்களிப்பிலும் பொது நிதியகம் மென்மேலும் வளர்ந்து சிறப்பாக பணியாற்றிட வல்ல ரஹ்மான் நாடட்டும்
ReplyDelete------------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை
பைத்துல்மால் அபுதாபி கிளைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை