.

Pages

Wednesday, July 17, 2013

'அதிரை நியூஸ்'ஸின் நேர்காணலின் போது தந்த வாக்குறுதியை நிறைவேற்றிய நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்கள் !

அதிரை பொதுநலன் சார்ந்த கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டி அதிரை நியூஸ் சார்பாக கடந்த [ 01-06-2013 ] அன்று நேரடியாக சந்தித்து வலியுறுத்தினோம்.

அதிரை நியூஸின் நேர்காணலைக் காண  [ காணொளி ]

1. அரசு பொதுமருத்துவமனையின் கூடுதல் மருத்துவருடன் கூடிய 24 மணி நேர சேவை...

2. அரசின் சார்பாக அதிரையிலிருந்து மன்னார்குடிக்கு புதிய போக்குவரத்து துவக்குதல்...

3. அதிரை பேரூந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலையை மறு சீரமைத்து தருதல்...

உள்ளிட்ட நமது கோரிக்கைகளை அன்றைய தினம் கவனமாக கேட்டுக்கொண்டு நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக மூன்று கோரிக்கைகளில் ஒன்றாகிய அதிரை பேரூந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை சாலையை மறு சீரமைத்து தருதல் தொடர்பாக நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் பகுதியில் சாலைகள் குண்டும் – குழியுமாக உள்ளது. இந்த சாலை அதிராம்பட்டினத்திலிருந்து மகிழங்கோட்டை வரை செல்லும் சாலை ஆகும். இச்சாலையில் பொது மக்கள் உரிய நேரத்தில் சென்று வர முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து விரைவாக இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

அதிரை பொதுமக்களின் பொதுநலன் சார்ந்த பிரச்சனையை விரைவாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற தங்களுக்கு, அதிரை பொதுமக்கள் மற்றும் அதிரை நியூஸ் குழுமத்தின் சார்பாக வாழ்த்துகளையும் - பாராட்டுகளையும் அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். மேலும் மற்ற இரு கோரிக்கைகளையும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அதிரை பொதுமக்களின் சார்பாக அன்புடன் நினைவூட்டுகின்றோம்.

அதிரை நியூஸ் குழு

10 comments:

  1. விரைவாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள் ஸார்...

    மேலும் மற்ற இரு கோரிக்கைகளையும் விரைவாக நடவடிக்கை எடுக்க தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. அதிரை பொதுமக்களின் பொதுநலன் சார்ந்த 'மக்கள் குறைதீர்ப்பு' முகாமையும் விரைந்து நடத்த முயற்சிக்க வேண்டும் என அன்புடன் தங்களை அதிரை பொதுமக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. விரைவாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. விரைவாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. விரைவாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. காமராசர் பிறந்தநளில் நல்ல இனிப்பான செய்தியை அதிராம்பட்டினம் வாக்காளப்பெருங்குடி மக்களுக்கு தந்துள்ள ஐயா ரங்கராசன் அவகளுக்கு நன்றி

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    காமராசர் பிறந்தநளில் நல்ல இனிப்பான செய்தியை அதிராம்பட்டினம் வாக்காளப்பெருங்குடி மக்களுக்கு தந்துள்ள ஐயா ரங்கராசன் அவகளுக்கு நன்றி

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  8. விரைவாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. விரைவாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள். இதேபோல் மற்ற கோரிக்கையையும் நிறைவேற்றி தர வேண்டுகிறேன்........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.