.

Pages

Thursday, July 18, 2013

சபுராளிகளை வியக்க வைக்கும் அதிரை உழைப்பாளிகள் !

ஆயுள் முழுவதும் உழைக்கும் உழைப்பாளிக்கு நன்றி செலுத்தும் வகையில் உழைப்பாளிகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் உழைப்பை நாம் பெருமையுடன் நினைவுகூற வேண்டும் !

அதிரை – இவ்வூரில் சிறந்த உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடியவர்கள் பலர் இருந்தாலும் அவர்களில் நம் நினைவில் என்றென்றும் குடியிருப்பவர், நன்கு அறிமுகமானவர், நல்ல பண்பாளர், கடின உழைப்பாளி ஆகியோரில் சிலரை மாத்திரம் எடுத்துக்கொண்டு அவர்களைப்பற்றிய சிறுகுறிப்புடன் தொகுத்து வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இவர்கள் நமக்கும் நமக்கு பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கும் கடின உழைப்பிற்கும், சிறந்த பண்பிற்கும் நல்லதொரு முன்னுதாரணமாக சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையில்...

'ஆ'ரம்பம் செய்வோம்...
S.M. சுலைமான்
குலசேகரப்பட்டினத்திலிருந்து சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு நமதூருக்கு வந்து ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்து அதன் மூலம் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றவர். இன்னும் அதே பெட்டிக்கடை...! மார்க்க அறிஞராகவும், பேச்சாளராகவும் இருந்துகொண்டு சேவைகள் செய்துவருவது சுலைமாக்கா அவர்களுக்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இவர் மேலத்தெருவில் வசித்து வருகிறார்.
முஹம்மது அப்துல்லா
நடுத்தெருவைச் சேர்ந்த இவர் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றுள்ளவர். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர்...இவரின் பேச்சு நகைச்சுவை உணர்வுடன் காணப்படும். நமதூர் கடைத்தெருவில் சிறிய கடையொன்றை வைத்து அதன் மூலம் சிறுதொழிலாக அரிசி வியாபாரத்தை செய்து வருகின்றார்.
M.P. சிக்கந்தர்
1968 முதல் இன்று வரை நாளிதழ், வாரஇதழ், மாத இதழ் போன்றவற்றை விற்பனை செய்யும் அதிரையின் முதல் நபர் என்ற சிறப்பைப் பெறும் இவர் நமதூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். நமதூரில் இவரைத் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது இவரது நட்பு வட்டம். ஞாபக சக்தியில் சிறந்தவராக உள்ள இவர் வசிப்பது தரகர் தெருவில்.

P. அப்துல் ரெஜாக்
'கொடுவா பிஸ்க்' என்றாலே முதலில் நம் நினைவில் வருபவர் இவர்தான். மீனை அழகாக துண்டுகள் இட்டு கூறு கட்டுவது இவரின் தனிச்சிறப்பு. தன் சிறுவயது முதலே மீன் வியாபாரம் செய்யும் இவர் கடின உழைப்பாளியும்கூட இன்றும் சுறு சுறுப்பாய் வேலை செய்வது என்பது இவரின் இயல்பு. கடைத்தெருவில் கடை வைத்திருக்கும் இவர் கீழத்தெருவைச் சார்ந்தவர்.

K.S.A. சாகுல் ஹமீத்
உயரமான மனிதர்... துரு துரு பார்வை....சமூக சேவைகள்....இவரின் கூடுதலான சிறப்புகளாக கருதப்படுகிறது. கடற்கரைத்தெருவில் வசிக்கும் இவர் இந்தப்பகுதியின் வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவரின் தொழிலாக உணவகம் உள்ளது.

S.M. முஹம்மது பாருக்
முதியவரான இவர் ஹாஜா நகர் பகுதியைச் சார்ந்தவர். இவரின் தொழில் முடிதிருத்தம் செய்வது. கடற்கரைத்தெருவின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ள இவரின் சலூன் கடை மிகவும் எளிமையாகக் காட்சி அளிக்கின்றது. இவருக்கு சிறு தொழில் செய்வதற்கு சமூதாய அமைப்புகள் உதவி செய்ய முன்வர வேண்டும்.

சாகுல் ஹமீத்
'தட்டு வண்டி' சாகுல் என்றாலே பட்டென்று அனைவரும் அறிவர். இவரின் கடின உழைப்பு, பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். சின்ன தைக்கால் தெருவைச் சார்ந்த இவர் பகுதி நேர தொழிலாக தெருத் தெருவாக குழாப்'புட்டு' விற்று வருகின்றார்.
S. முஹம்மது ஹசன்
'பட்டர் பிஸ்கட்' என்றால் முதலில் நினைவில் கொண்டு உச்சரிப்பது இவரின் பெயரைத்தான். நெசவுத்தெருவில் வசிக்கும் இவர் சொந்த தொழிலாகக் கடைகளுக்கு பட்டர் பிஸ்கட் விநியோகம் செய்துகொண்டு இருந்தவர் தற்போது நெருக்கமானவர்களுக்கு தென்னைந் தோப்புகளை பராமரிக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.
M.அயூப்கான்
பிலால் நகரில் வசிக்கும் இவர் கடின உழைப்பாளி. கடந்த 27 ஆண்டுகாலமாக வடை, சம்சா, போண்டா ஆகிய பலகாரங்களை தள்ளு வண்டி மூலம் விற்பனை செய்து வருகின்றார். இவரின் கடையில் விற்கக்கூடிய பலகாரங்களின் விற்பனை விலை மற்ற கடைகளை வீட குறைவு என்பது தனிச்சிறப்பு. கடைத்தெருவின் பிரதான சந்திப்பு அருகே இவரின் அன்றாட வியாபாரம் செய்யும் இடமாக உள்ளது.

இறைவன் நாடினால் ! 'உழைப்பாளிகள்' இன்னும் தொடருவார்கள்... பதிவுகளில் கம்பீரமாக

சேக்கனா M. நிஜாம்
இது ஒரு மீள்பதிவு

4 comments:

  1. நமதூர் உழைப்பாளிகளை அனைவருக்கும் அறியத்தந்து நினைவூட்டிய அதிரை நியூஸிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. Good to hear about the profile of hard working Adirai men(s). Thank your for identifying and publishing them. Keep up the good work.

    Adirai Dawood(From Dallas, Texas)

    ReplyDelete
  4. Good to hear about the profile of hard working Adirai men(s). Thank your for identifying and publishing them. Keep up the good work.

    Adirai Dawood(From Dallas, Texas)

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.