.

Pages

Saturday, July 20, 2013

பிலால் நகர் ஈசிஆர் சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து ! இருவர் பலத்த காயம் !

இன்று [ 20-07-2013 ] இரவு 9 மணியளவில் அதிரை சேது பெருவழிச்சாலை பிலால் நகர் அருகேயுள்ள சாலையோர பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவர் பலத்த காயம் அடைந்தனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து மீன் லோடு ஏற்றி வந்த மினி லாரி பிலால் நகர் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தை கடந்து செல்லும் போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் இரு சக்கர வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியதுடன் அதில் பயணம் செய்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து முதலுதவி செய்தனர். மேலும் விரைவாக ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இந்தப் பகுதி முழுவதும் சில மணி நேரங்கள் பரப்பரப்பாக காணப்பட்டன. 

விபத்து குறித்து தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை நடத்தினர். பலத்த காயம் அடைந்த இருவரும் அதிரை அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. 




3 comments:

  1. விபத்தில் காயம் அடைந்தவர்கள் நலம் பெற துவா செய்வோம்மாக.......

    ReplyDelete
  2. வண்டிகள் ஓட்டும்பொழுது கவனமாக ஓட்ட வேண்டும் .விபத்தில் காயம் அடைந்தவர்கள் நலம் பெற துவா செய்வோம்மாக.....

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.