.

Pages

Saturday, July 6, 2013

அமீரக துபையில் நடந்த கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம்.!

அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் 05/07/2013 வெள்ளிக்கிழமை அன்று மக்ரிபு தொழுகைக்கு பின் துபை ஹோர் அல் அன்ஜில் உள்ள அமீரக துபை கீழத்தெரு மஹல்லா துணைத்தலைவர் ஜனாப் ஜியாவுதீன் அவர்களின் ரூமில் நடைபெற்றது. அமீரக துபை கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சகோதரர் A.பகுருதீன் கஹ்ராத் ஓதி சிறப்புடன் ஆரம்பமானது.

நமது ஊர்,மற்றும் நமது மஹல்லா வாசிகள் நலன் கருதி நல்ல பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதில் நமது தெரு இளைய சமுதாயத்தினரின் துடிப்பான சில  நடவடிக்கைகள் குறித்தும் வேதனையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சில முக்கிய கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன.

கூட்டத்தில் முன்வைத்து பேசப்பட்ட கோரிக்கைகள்.!

1.நமதூரில் அமைந்துள்ள ஷிஃபா மருத்துவமனைக்கு முக்கியத்துவம் கொடுத்து  சிகிச்சைக்காக வெளியூர் செல்வதைத்தடுத்து ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சை பெற தெருவாசிகளுக்கு வலியுறுத்துவது.

2,இன்ஷா அல்லாஹ் வரவிருக்கும் இந்த வருட ரமலான் மாதத்து துபை ஃபித்ரா வசூலை கூடுமான வரை முன் கூட்டியே வசூலித்து
ரொம்பவும் ஏழ்மை நிலையில் உள்ள நமது தெருவாசிகளுக்கு தொகையை அதிகப்படுத்திக் கொடுப்பது.


3,அடுத்து முக்கியமாக அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் பெற கீழத்தெரு மஹல்லாவைச் சேர்ந்த சகோதரர் N.புகாரி அவர்களை அணுகிட வேண்டியும் இரத்த தானம் பெறுவதற்கான செய்தியை எல்லோர்க்கும் அறியப்படுத்தியும் வைக்கப்பட்டது.

4,இறுதியில் கூட்டத்தில் மிக முக்கியமாக தெரியப்படுத்திக் கொண்டது என்னவெனில் நமது தெரு மஹல்லாவில் நடக்கும் எந்தப்பிரச்சனையாயினும் நமதூர் கீழத்தெரு மஹல்லா தலைமை நிர்வாகக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது என்று ஒரு மனதை தீர்மானிக்கப்பட்டது.

5,மற்றும் இந்த புனிமிக்க ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் பொய்,புறம்,கோல் ஆகியவைகளைத்தவிர்த்து  அதிகமாக  விபாதத்துக்களையும் நல் அமல்களை செய்வதுடன் தானம், தர்மம், ஜக்காத்,சதக்கா போன்றவைகளை அதிகம் வழங்கி இறைவனின் அருளையும் நெருக்கத்தையும் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

குறிப்பு:- நமதூராயினும் வெளியூராயினும் அவசர சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டியது
N. புகாரி அலைபேசி எண் 00971 50 5058285













புகைப்படம் & செய்தித்தொகுப்பு : அதிரை மெய்சா
                                
[ அதிரை ஈஸ்ட் & அதிரை நியூஸ் பதிவாளர் ]                          

4 comments:

  1. // 1.நமதூரில் அமைந்துள்ள ஷிஃபா மருத்துவமனைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சைக்காக வெளியூர் செல்வதைத்தடுத்து ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சை பெற தெருவாசிகளுக்கு வலியுறுத்துவது.//

    நல்லதொரு தீர்மானம் !

    நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. நல்ல தொரு தீர்மானம் பயனடைய என் வாழ்த்துக்கள் .அதிரை சலீம் ராஜா

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.