.

Pages

Saturday, September 14, 2013

அதிரை பூராவும் ஒரே நாய்த் தொல்லை.. என்னமாச்சும் பண்ணுங்கப்பா.. மக்கள் புலம்பல் !!

அதிரையில் எங்கு பார்த்தாலும் ஒரே நாய்த் தொல்லையாக இருப்பதாகவும், அதிகாலை நேரங்களில் நடமாடப் பயமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கருதுகின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நாய்களை பிடித்து கொல்வது என்பதை இப்போது தடை செய்து விட்டதால் யாருமே நாய்களைப் பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. தெருவுக்கு பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றிக் கொண்டிருப்பதால் மக்கள் பயத்துடனேயே நடமாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தெருவோரம் சுற்றித்திரியும் நோய் பிடித்த நாய்களால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஆடு, மாடு போன்ற ஜீவன்ங்களும் அதன் கடியால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதுபோன்ற நாய்களை கட்டுக்குள் கொண்டுவந்து கருத்தடை செய்தால் நாய்களின் கடிக்கும் தன்மை குறைந்து விடும் என்பது பெரும்பாலான சமூக ஆர்வலகர்களின் கருத்தாக இருக்கிறது.

பள்ளி செல்லும் குழந்தைகளையும், மருத்துவம் எடுத்துக்கொண்டுள்ள வயோதிகளையும் குறிவைத்து தாக்கின்ற நாய்களின் கொட்டத்தை அடக்க பேரூர் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலன மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

7 comments:

  1. திடு புடு ன்னு களத்தில எறங்கி வேலெ செஞ்சே நம்மூரு சேர்மனுக்கு பதவிக்கு வந்த 2 வருசத்திலேயே அசந்து போச்சாம். இன்னும் மூணு வருசம் எப்படி ஓட போவுதோ..... முடியலே!

    ReplyDelete
  2. இப்பவெல்லாம் நம்ம ஊர்லே ஆடு மாட்டுக்கு பதிலா இந்த நாய் தான் கூட்டம் கூட்டமா சுத்துது. இதை யாரும் கண்டுக்கிர்ர மாதிரி தெரியல. புள்ளைங்க மட்டுமல்ல பெரியவங்கலும் தனியா போவ பெயப்புடுறாங்க.! இதுக்கு ஒரு விடிவு காலம் பொறக்காதா.?

    ReplyDelete
    Replies
    1. சரியாய்ச் சொன்னீங்க... இந்த முறை ஊர் சென்றபோது ஒரு பசுமாட்டைக் கூட பார்க்கவில்லை (அல்லது கவனிக்கவில்லை)...

      Delete
  3. இதுக்கு ஒரு விடிவு காலம் பொறக்காதா.?

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. இப்பவெல்லாம் நம்ம ஊர்லே ஆடு மாட்டுக்கு பதிலா இந்த நாய் தான் கூட்டம் கூட்டமா சுத்துது. இதை யாரும் கண்டுக்கிர்ர மாதிரி தெரியல. புள்ளைங்க மட்டுமல்ல பெரியவங்கலும் தனியா போவ பெயப்புடுறாங்க.! இதுக்கு ஒரு விடிவு காலம் பொறக்காதா.?

    ReplyDelete
  6. நம்ம ஊர் கல்யாணத்தி்ர்க்கு சாப்பிடுவதுகக்கு ஆட்கள் வர்ரார்கலோ இல்லையோ நாய்கள் மட்டும்
    கரைட்டா வந்துருது,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.