.

Pages

Saturday, September 14, 2013

பட்டுக்கோட்டையில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

உத்திரப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தமுமுக தீர்மானித்துள்ளதை அடுத்து தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை தமைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட [ தெற்கு ] தலைவர் S. அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை வகிக்க, கண்டன உரையை தலைமை கழகப் பேச்சாளர் சமீம் அவர்கள் நிகழ்த்த, தஞ்சை மாவட்ட செயலாளர் S. அஹமது ஹாஜா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

உ.பி.யில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் இதர சமூகத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கி வன்முறையாளர்களை ஒடுக்கி அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய மற்றும் உ.பி. மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றன.

இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.






2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. மாவட்ட சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு 50க்கு குறைவானவர்கள் பங்கேற்றால் உங்களுக்கு எப்படி நடாளுமன்ற தேர்தலில் சீட்டு தருவார்கள்? குறைவானவர்கள் கலந்துக்கொண்டால் அந்த போட்டேவை வெளியிடாமல் தவிர்க்கலாம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.