அதிரையில் நேற்று நடந்து முடிந்த அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றிய சம்பவத்திற்குப் பிறகு இன்று த.மு.மு.க. மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ் M.L.A. அவர்கள் இராமநாதபுரம் கடல் பகுதியில் கடலில் கடற்ப்பாசி பயிரிட்டவர்களின் பயிர்கள் அழுகி நஷ்டம் ஏற்பட்டது குறித்து ஆய்வை முடித்து விட்டு திரும்பும் வழியில் அதிரை நகர த.மு.மு.க. நிர்வாகிகள் கேட்டுகொண்டதற்கிணங்க அப்புறப்படுத்திய குடிசைகள் அமைத்த இடத்தை வந்து பார்வையிட்டார்.
அப்போது திரண்டு வந்து மக்கள் நேற்றைய சம்பவத்தை எடுத்துரைத்து கோரிக்கையாக முன் வைத்தனர். மக்கள் வைத்த கோரிக்கைகளை மனுவாக தரும்படி கேட்டுக் கொண்டார்.
அப்போது த.மு.மு.க.மாவட்டச் செயலாளர் அகமது ஹாஜா, நகரத் தலைவர் சாதிக் பாட்சா, நகர செயலாளர் தமீம், நகர பொருளாளர் செய்யது முகம்மது புகாரி ஆகியோர் உடன் இருந்து நடந்த சம்பவம் குறித்து மேலும் விரிவாக எடுத்துரைத்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
வருகைக்கு நன்றி.
ReplyDelete