.

Pages

Wednesday, July 15, 2015

களத்தில் நின்று வேலை வாங்கும் கவுன்சிலர் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட ஜாவியா சாலையில் தக்வா பள்ளி மையவாடியின் மேற்கு பகுதியை ஒட்டி காணப்படும் கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சீர் செய்யும் பணி இன்று காலை நடைபெற்றது.

சுமார் 300 அடி நீளமுள்ள இந்த வடிகாலில் அப்பகுதியை சுற்றிக்காணப்படும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சென்று வந்தது. வடிகால் திறந்த நிலையில் காணப்பட்டதால் இங்கு சேரும் குப்பை, கூளங்கள், மணல்கள் வடிகாலில் புகுந்து அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி காணப்பட்டது. துர்நாற்றமும் வீசி வந்தது.

இந்நிலையில் இந்த வடிகாலில் சூழ்ந்துள்ள கழிவு மணல்கள் முழுவதும் அப்புறப்படுத்தும் பணி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. வடிகாலில்
ஏற்பட்டுள்ள அடைப்புகள் சீர் செய்யப்பட்டன. இந்த பணிகளை அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் மேற்பார்வையில் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 6 பேர் ஈடுபட்டனர்.

அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப், தனது வார்டு பகுதியில் காணப்படும் குறைகளை அவ்வப்போது அதிரை பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதோடு மட்டுமல்லாமல் குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் விதத்தில் ஊழியர்களோடு களத்தில் கூடநின்று வேலை வாங்கும் பாங்கை இப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர். 'இவரைப்போன்று அதிரையின் பிற பகுதிகளின் வார்டு கவுன்சிலர்களும் அதிக ஈடுபாட்டோடு பொதுநலப்பணி ஆற்ற முன்வர வேண்டும்' என மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டனர்.
 
 
 

3 comments:

  1. In javiya road( opposite javiya ) from 4 to 5 years still now street lights not installed. When will he ( Abdul lattif) take action ?

    ReplyDelete
  2. In 4 to 5 years how many times did you asked or complain to Latif ?

    ReplyDelete
  3. Hi friends very to happy see our councilor Mr latheef's dedication work and more involvement is successful of symbol

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.