இந்நிலையில் இன்று காலை அதிரை கடைத்தெரு மீன் மார்கெட்டிற்கு சிங்கி இறால்கள் விற்பனைக்கு வந்தது. மீன் வியாபாரிகள் கிலோ ₹ 300 வரை விற்பனை செய்தனர். மருத்துவ குணம் கொண்ட இவ்வகை சிங்கி இறால்கள் 200 கிராம் முதல் 250 கிராம் வரை எடையளவில் காணப்பட்டது. இவற்றை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
சிங்கி இறால் குறித்து மீன் வியாபாரி நிஜாம் நம்மிடம் கூறியதாவது...
'மீனவர்கள் இவற்றை மட்டை சிங்கி எனக்கூறுவர். சர்வேதச மார்க்கெட்டில் நல்ல விலை போககூடிய சிங்கி இறால்கள் கடலில் பாறைகளுக்கு அடியில்தான் வளரும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் வந்து இரைகளைத் தேடித் தின்னும். இவற்றைப் பிடிப்பதற்கென்றே சிங்கி வலை, டிஸ்கோ வலை போன்ற வலைகளும் உள்ளன. இவ்வகை இறால்களில் நார்ச்சத்து மிகுந்து காணப்படும். மிகவும் சுவையாக இருக்கும் இவற்றை வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை மீனவர்களின் வலைகளில் மிகக்குறைவாகவே சிக்கும்' என்றார்.




பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசங்கை மிகு சஹர் ரமலான்.
இது எப்படி? மற்ற இறால்களைப்போல் டேஸ்டா அல்லது வித்தியாசமான டேஸ்டா?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.