சத்தீஷ்கர் மாநிலம், கோரியா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஷிவ்பாரன். இவர் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டவர். கடந்த 10ஆம் தேதி குடித்துவிட்டு பள்ளிக்கு சென்று பாடம் நடத்தியுள்ளார். அதனை அப்பகுதியை சேர்ந்த செய்தியாளர் வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளார்.
பள்ளியில், ஆசிரியர் டி பார் ‘டாரு’(மதுபானம்), பி பார் ‘பியோ’ (குடித்தல்)என குழந்தைகளுக்கு பாடம் நடத்தியது அம்பலமாகியது. பாடம் நடத்தியபோதும் ஆசிரியர் போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியரிடம் கூறுகையில், "நான் பாடதிட்டத்தின்படியே பாடம் நடத்துகிறேன்" என்று கூறியுள்ளார். பின்னர், திடீரென அந்தர்பல்டி அடித்த ஆசிரியர், தான் குடித்துவிட்டு பாடம் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மேலும் கூறுகையில், "என்னுடையை குடிபழக்கத்தை விடமுடியவில்லை. என்னுடைய தவறை நான் ஒத்துக்கொள்கிறேன். இதன்பிறகு நான் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு பாடம் நடத்தமாட்டேன்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே மாவட்ட நிர்வாகம், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
ஆனால், மாவட்ட கலெக்டரோ, "வேலை பார்க்கும் இடங்களில் குடிப்பது என்பது, சிறந்த நடவடிக்கைக்கு எதிரானது. குறிப்பாக ஆசிரியர்கள். ஆசிரியரால் இந்த தவறு செய்யப்பட்டு இருந்தால், நாங்கள் இதனை விசாரணை நடத்துவோம். அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:விகடன்

தெருவுக்கு தெரு மதுக்கடை திறந்து வைத்துவிட்டு, அதற்கு விற்பனை கோல் நியமித்துவிட்டு ... அரசே இப்படி செய்யும் போது குடிப்பவர்களை குறை சொல்வது என்ன் நியாயம்? ஆசிரியர்களும் மனிதர்கள் தானே, அவர்களும் பொறுப்புள்ள குடிமக்கள் தானே. அரசு சொல்லும் ஒரு கடமையை செய்ய வேண்டும் என்கிற பொறுப்பு அவர்களுக்கு மட்டும் இருக்காதா என்ன? சாராயக் கடைகளை முதலில் மூடுங்கப்பா. ஒரு அமைச்சரே குடிப்பது சமூக அந்தஸ்து என்று வேறு உளறி இருக்கிறார். என்னய்யா நடக்குது இந்த நாட்டுலெ. -வெங்கட்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடாஸ்மார்க் கடைகளில் விற்பனை குறைவதற்கான காரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து விற்பனையை அதிகரிக்க பரிந்துரைகளை தர வேண்டும் என்று அரசுஉத்தரவிட்ட அவலம் நிகழ்ந்ததே
ReplyDeleteடாஸ்மார்க் கடைகளில் விற்பனை குறைவதற்கான காரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து விற்பனையை அதிகரிக்க பரிந்துரைகளை தர வேண்டும் என்று அரசுஉத்தரவிட்ட அவலம் நிகழ்ந்ததே
ReplyDeleteஆசிரியர்கள், சாமியார்கள் மற்றும் அரசியல்வாதிகள் பணி மிகவும் மரியாதைக் குறியது. எவ்வளவு பெரிய பணக்காரன் ஆனாலும், இவர்களுக்கு முன் கை கட்டி தான் நிற்கணும். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த வேலை. இவர்களுக்கு இவர்களே தான் பாஸ். அப்படிப்பட்ட உயர்ந்த வேலை. பகல் நேர வேலை. கை நிறைய.. இல்லை பை நிறைய பணம் வரும் வேலை. இருப்பதிலே சொகுசான வேலை. இந்த வேலையை இப்போது செய்வார்கள். அப்படி பட்ட உயர்ந்த வேலையில் இருக்கும்போது, எல்லா இடத்திலும் மரியாதை கிடைப்பதாலும், பகல் நேர சொகுசான கவலை இல்லாத பணவரவுள்ள வேலை செய்யும்போது, உடம்பு தினவெடுக்கும். எதையாவது குறும்பாக செய்ய தோணும். உடம்பில் செக்ஸ் உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடும். எதயாவது, கொழுப்பெடுத்து செய்ய தோணும். அதன் விளைவு தான் இவைகள். இந்த மூன்று வேலை செய்பவர்கள், செய்யாத தவறு இதுவரை எதுவும் இல்லை. தவறுக்கு சரியான தண்டனையும் இல்லை
ReplyDeleteவீட்டில் இருந்து நிரந்தரமாக குடிப்பதற்கு கல்வித்துறை இவரை அனுப்ப வேண்டும்.