அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப். தனக்கு கிடைக்கும் நேரங்களை பயனுள்ள வகையில் பொதுநல சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது வார்டு பகுதிகளில் ஆங்காங்கே மண்டிக்கிடக்கும் முட்புதர்களை அப்புறப்படுத்தினார். இதையடுத்து பசுமையை வலியுறுத்தி தனது சொந்த செலவில் மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் சாலையோரங்களில் தேங்கி காணப்படும் மணல்களை அதிரை பேரூராட்சி துப்புரவு ஊழியர்களின் துணையோடு தனது வீட்டிலிருந்து எடுத்து வந்த ( விளக்குமாறு ) துடைப்பான்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். இதையடுத்து அப்பகுதி தூய்மையாக காட்சியளித்து வருகிறது. பேரூராட்சி ஊழியர்களோடு களத்தில் கூட நின்று பணிபுரியும் இவரது பொதுநலப்பணியை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துகின்றனர். இவரைப்போன்று அதிரையின் பிற பகுதிகளின் வார்டு கவுன்சிலர்களும் அதிக ஈடுபாட்டோடு பொதுநலப்பணி ஆற்ற முன்வர வேண்டும்' என மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டனர்.







பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசங்கை மிகு சஹர் ரமலான்.
அய்யா, தலைப்பை பார்த்ததும் பயந்தோ பயமாக இருக்கின்றது. உள்ளே சென்றால் வாழ்த்தலாம் போல் இருக்கின்றது.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.
// தலைப்பை பார்த்ததும் பயந்தோ பயமாக இருக்கின்றது. உள்ளே சென்றால் வாழ்த்தலாம் போல் இருக்கின்றது.//
ReplyDeleteவாழ்த்தலாம் போல இருக்கிறது அல்ல வாழ்த்தலாம். வாழ்த்தனும் வாழ்த்திப் பாராட்டியே ஆகணும். சுற்றுச்சூழல்,பேணுதல் மரம் நடுதல் ஆகியவை சிறந்த பணிகள்.
பாராட்டுவோம்.
தெருத்தெருவாய் கூட்டுவது பொது நலத்தொண்டு. ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுய நலமுண்டு ( மோடி ).சமூக அக்கறைக் கொண்ட 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் -நன்றியும் கூட.
ReplyDeleteகெஜ்ரிவால் கோபித்துக் கொள்வார் விலக்கு மாறு வேண்டாம் கூட்டு பிரஸ் போதும். துணியை சுத்தம் செய்ய FAE சோப்பு தூள்பயன்படுத்துங்கள்
ReplyDelete