இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பிலால் நகர் பகுதியின் வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்து தண்ணீரை வாய்க்கால்களில் சீராகக் கொண்டு செல்லும் பணிகளில் அதிரை எஸ்டிபிஐ கட்சியினர் ஈடுபட்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் அஜார் தலைமையில், செயலாளர் இக்பால், செயற்குழு உறுப்பினர் அன்வர், உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் பிலால் நகர் பகுதியில் முகாமிட்டு ஆங்காங்கே தேங்கி கிடந்த வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த பணிக்காக மம்மட்டி, வாங்கருவா, கம்பு, கடப்பாரை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாய்க்கால்களில் அடைபட்டுள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தினார்கள். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இவர்களின் பணியை இந்த பகுதியினர் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர். மேலும் இவர்களுக்கு தேநீர் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
இதையடுத்து இந்த பணியை ஏற்பாடு செய்துகொடுத்த எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிரமாக களப்பணியாற்றி வரும் தனது கட்சியினரை சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
























Thanks brothers. ...
ReplyDeleteMasha Allah . we should be give first performance to local area, then out side.
ReplyDeleteஇந்தப் பணியை ஏற்று செய்த உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக! இந்த செய்தியை பல இடங்களிலும் பரப்பியும் இதற்காக உண்மையாகக் களமிறங்கிய உங்களை மிகவும் பாராட்டுகிறேன்.
ReplyDelete