தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் அவர்கள் முன்னிலையில் கொடி அணி வகுப்பு பழைய பேருந்து நிலையத்தில் இன்று (13.11.2016) நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேரணியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் அச்சமின்றியும், சுதந்திரமாக வாக்களிக்கவும், பொது மக்கள் பதற்றத்தை தணிக்கும் வகையில் கொடி அணி வகுப்பு நடைபெறுகின்றது.
தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 48 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இது வரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.9 கோடியே 8 இலட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி 39 குழு அமைக்கப்பட்டு, இதில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.
இக்கொடி அணி வகுப்பு தஞ்சாவ10ரின் முக்கிய வீதிகளான பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கீழ வீதி வழியாக, வெள்ளை பிள்ளையார் கோவில் தெரு, கீழவாசல், கொடிமரத்து முலை, வடக்கு வாசலில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், பயிற்சி ஆட்சியர் பிரசாந்த், மாநகராட்சி ஆணையர் வரதராஜன், வட்டாட்சியர் குருமூர்த்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு மற்றும் அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.