தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள மல்லிபட்டினம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள மரியம் வணிக கட்டிடத்தில் புதிதாக தமிழ் பால் விநியோக மையம் நேற்று முன்தினம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மரியம் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ஏ.சரபுதீன் கலந்துகொண்டு பாலகத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை ஜி.கே டெய்ரி நிறுவன துணை பொது மேலாளர் கே. ராஜகோபால் தொடங்கி வைத்தார்.
தொடக்கத்தில் பாலக விற்பனை மையத்தின் உரிமையாளர் சி.வீரையன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மல்லிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மருதமுத்து, மல்லிபட்டினம் ஜமாத் செயலர் எம்.கே சாகுல்ஹமீது, தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கத் தலைவர் அப்துல் சமது, மல்லிபட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இம்மையத்தில் பால், தயிர், வெண்ணெய், பசுநெய் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
புதிய பாலகம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நேரத்தில் நூலகம் அமைக்க அரசு அதிகாரிகள் ஆவணசெய்ய வேண்டும். அடிக்கடி பிரச்சனைக்கு உள்ளாகும் பகுதியென்பதால் அறிவைவளர்க்க நேரத்தை பயனுள்ளதாக அமைய தேவையான இடத்தில் நூலகம் அமைந்தால் பள்ளிமாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் . தொழில் வளர வாழ்த்துக்கள்
ReplyDelete