புனித ஹஜ் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு தாயகம் திரும்பி உள்ள லயன்ஸ் சங்கம் மாவட்டத் தலைவர் ஹாஜி ஆஃப்ரின் நெய்னா முஹம்மது அவர்களுக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் இன்று பிறந்த நாள் விழா காணும் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சாரா அஹமது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க உறுப்பினர் வாசுதேவன் இல்லத்தில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள திருமணத்தையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக், செயலர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் சாகுல்ஹமீது, மண்டலச் செயலர் பேராசிரியர் செய்யது அகமது கபீர், மாவட்டத்தலைவர்கள் முஹம்மது முகைதீன், பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி, எஸ்.ஏ அப்துல் ஹமீது, சாரா அகமது, சாகுல் ஹமீது, முன்னாள் உடனடித் தலைவர் ஆறுமுகச்சாமி, செல்வராஜ், உறுப்பினர்கள் அதிரை மைதீன், நிஜாமுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வாழ்த்துக்கள் !!!
ReplyDelete1.லயன்ஸ் சங்கம் மாவட்டத் தலைவர் ஹாஜி ஆஃப்ரின் நெய்னா முஹம்மது
2.லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சாரா அஹமது
ஒரு மாவட்ட தலைவர் பதவிக்கு இரு தலைவர்கள் எப்படி இருக்க முடியும் ?
விளக்கம் தரவும் !