.

Pages

Tuesday, January 2, 2018

துபையில் சாலிக் அட்டைகளுக்கு வாட் ! ஆன்லைன் ரீசார்ஜ்க்கு வாட் இல்லை!!

அதிரை நியூஸ்: ஜன.02
துபையில் சாலிக் அட்டைகளை வாங்கினால் வாட்! ஆன்லைனில் ரீசார்ஜ் செய்தால் வாட் இல்லை!!

துபையில் மொத்தம் 7 சாலிக் டோல்கேட்கள் (Salik Tolls) உள்ளன. இவற்றில் ஒவ்வொரு முறை செல்லும் போதும் 4 திர்ஹம் சாலிக் கணக்கிலிருந்து கழியும். இந்த சாலிக் ரீசார்ஜ் டேக்குகள் பெட்ரோல் நிலையங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் குறைந்தபட்சம் 100 திர்ஹம் என்ற விற்பனை விலையில் கிடைத்து வந்தன.

இப்போது அமீரகத்தில் 5% வாட் வரி அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதும் விதிக்கப்பட்டுள்ளதால் 105 திர்ஹத்திற்கு விற்கப்படுகின்றன ஆனால் இந்த சாலிக் டேக்குகளை ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்தால் 5% வாட் வரி விதிக்கப்படுவதில்லை. அதேபோல் டோல்கேட்டுகளில் கழிக்கப்படும் 4 திர்ஹத்தின் மீதும் வாட் வரி இல்லை.

சாலிக் டேக்குகள் மீதும் 5% வாட் வரி விதிக்கப்படுவதாக சமூக தளங்களில் பகிரப்பட்ட பொய்யான செய்தியை அடுத்து சாலிக் அட்டைகள், பஸ், மெட்ரோ, டிராம், படகு மற்றும் டேக்ஸி கட்டணங்கள் மீதும் வாட் வரி விதிக்கப்படாது என துபை போக்குவரத்துத் துறை (RTA) மறுப்பு செய்தியை வெளியிட்டிருந்தது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.