அதன் ஒரு பகுதியாக இன்று (13.03.2020) ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி தஞ்சை இரயில் நிலையம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மாநகராட்சி அலுவலகம் சென்றடைந்தது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதில் இருநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆட்சிமொழி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது தொடர்பில் துண்டு பிரசுரங்கள் அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டன.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27-12-1956இல் இயற்றப்பட்டு 1957 சனவரி 19 ஆளுநரின் இசைவைப் பெற்றது. இது 1957 சனவரி 23 தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சிமொழிச் செயலாக்கப் பணிகள் அரசுத் துறைகளில் வேகம் பெற்றன. துறைதோறும் ஆட்சிசொல் அகராதிகள் வெளியிடப்பட்டன. ஏராளமான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு கலைச்சொல்லகராதிகள் தயாரிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் நினைவுகூறும் வகையிலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
மேலும் கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெறுகிறது. அரசாணையின்படி வணிக நிறுவனங்களில் கடைகளில் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெரிய அளவினதாகவும் அதற்கு அடுத்து ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை அமைக்கப்பட வேண்டும். வணிகர்கள் அரசினுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தொன்மை மிகு தமிழ் மொழி பல எதிர்ப்புகளைச் சந்தித்து வெற்றி பெற்ற போதிலும் தமிழ் இலக்கியங்களே அறியாத இன்றைய தலைமுறையினர்களுக்கு அரசினுடைய இம்மாதிரியான முயற்சிகள் பேருதவியாக அமையும.;
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஜானகி இரவீந்தரன், தஞ்சாவூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் கா.பொ.இராசேந்திரன, தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை செயலாளர் பழ.மாறவர்மன், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் ஆதி.நெடுஞ்செழியன், கவிஞர் வல்லம் தாஜ்பால், முனைவர் பேராசிரியர் இந்திராகாந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் மூத்த தமிழறிஞர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
All slot video games require players to wager a certain amount|a particular amount|a certain quantity} between fastened stakes in the hope of making pre-determined successful formations, using the symbols that populate the game’s major enjoying in} area. In 2017, the income MGM카지노 introduced in from noncasino slot machines surpassed what on line casino slots earned for the primary time. Although more cash is coming in from video slot machines, their fastened tax fee isn’t making up for the lower in on line casino wagering and admission taxes.
ReplyDelete