அதிரைப் பேரூராட்சியின் 12 வது வார்டு பகுதியில் குறிப்பாக மீரா மெடிக்கலை ஒட்டிய சாலையோரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தாததால் துர்நாற்றமும், குப்பைகளால் வாய்கால் கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி இருப்பதாகவும் அப்பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகைப்பட ஆதாரத்துடன் நம்மை அணுகினார்.
உடனே சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்ட அதிரை நியூஸ் குழுவினர் புகாரை உறுதிபடுத்திக்கொண்டு இந்தப்பகுதியின் வார்டு உறுப்பினர் நூர் லாட்ஜ் செய்யது அவர்களை நேரில் சந்தித்து குப்பை மற்றும் தேங்கிய கழிவு நீரை அப்புறப்படுத்தக் கேட்டுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து துரித நடவடிக்கையில் இறங்கிய நூர் லாட்ஜ் செய்யது அவர்கள், பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் அப்பகுதியில் தேங்கிய குப்பைகளை அப்புறப்படுத்த உடனிருந்து உதவினார். மேலும் பொதுமக்கள் சாலையோரமும், வாய்க்காலிலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோளையும் வைத்தார்.
அதிரை நியூஸ் குழுவினர்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலை சேகரித்து உடனே வார்டு உறுப்பினருக்கு அறியச்செய்த அதிரை நியூஸ்சிற்கு முதலில் நன்றி.
ReplyDeleteதகவல் கிடைத்ததும் துரிதமாக நடவடிக்கை எடுத்து குப்பை கூளங்களை அள்ளச்செய்து சுத்தம் செய்த வார்டு உறுப்பினர் நூர் லாட்ஜ் செய்யது அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க ஊரைச்சுத்தமாக வைத்துக்கொள்ள ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அறிவிப்புப்பலகை வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
பிரச்சனையை அதிரை நியூஸ் பார்வைக்கு துணிச்சலாக கொண்டுச் சென்ற சகோதரருக்கும், பிரச்சனை தீர உடன் நடவடிக்கையில் இறங்கிய 12 வது வார்டு உறுப்பினர் நூர் லாட்ஜ் செய்யது காக்கா அவர்களுக்கும் நன்றி !
ReplyDelete