.

Pages

Wednesday, July 10, 2013

அதிரையின் பள்ளிவாசல்களுக்கு புனித ரமலான மாத நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு அரசு வழங்கிய 30,580 கிலோ மானிய விலை அரிசி !

புனித ரமலான் மாத நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு முறையாக அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம்  அரசால் மானிய விலையில் பச்சரிசியைப் பெற்றுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களின் பொறுப்புகளில் இதற்குரிய பணிகள் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகின்றன. அதன்படி இந்த வருடம் 4000 டன்கள் பச்சரிசியை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகள் மூலம் விநியோகம் செய்ய தமிழக முதலமைச்சர் அவர்களால் கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கபட்டது.
ரசின் மானிய விலை அரிசியைப் பெறுவதற்காக  இதற்குரிய பணிகளை வருடம்தோறும் முன்னின்று கவனித்து வரும் பிலால் நகர் மஸ்ஜித்தின் முத்தவல்லி S.M.A. அஹமது கபீர் அவர்களால் அதிரையில் உள்ள மொத்தம் 31 பள்ளிவாசல்களுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்த கடந்த [ 06-07-2013 ] அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அவர்களால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள விண்ணபிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு 251. 990 டன் அரிசியை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் அதிரையைச் சார்ந்த பள்ளிவாசல்களுக்கு மட்டும் 30,580 கிலோ அரிசி ஆகும்.

மானிய விலை அரிசியை பெற்றுள்ள அதிரை பள்ளிவாசல்களின் பட்டியல் :

அரசால் நிர்ணயம் செய்துள்ள பச்சரிசியின் விலை கிலோ ஓன்றுக்கு ரூபாய் 1/- வீதம் அரசிற்கு செலுத்தப்பட வேண்டும். பச்சரிசியை ஏற்றி வருகிற வாகனங்களுக்குரிய வாடகைத் தொகையினையும் நாமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. good news for ramadhan.
    thanks.ahirai news.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.