சேது பெருவழிச்சாலையில் லைலாத்தி துணிக்கடை அருகில் உள்ள மின்கம்பத்திலிருந்து சாலையையின் குறுக்கே செல்லும் பிரதான மின்கம்பி எதிர்பாராத விதமாக வாகனத்தில் சென்றவர் மீது அறுந்து விழுந்தது.
இதனால் இப்பகுதி முழுவதும் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்பகுதியில் நிகழ இருந்து பெரும் விபத்து துரித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது.
நமதூரின் அனைத்து மின்கம்பிகளையும் பரிசோதித்து மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில் இத்தகைய விபத்துக்கள் இனியும் நடக்க வாய்ப்பு இருக்கும். சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளும் தான் முன் வந்து இதற்க்கு முயற்ச்சிக்க வேண்டும்.
ReplyDeleteமுயற்ச்சிப்பார்களா..!?
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகவலைக்குரிய விஷயம், மின்சாரம் இல்லாததினால் உயிர் பாதிப்பு இல்லை, மின்சாரம் இருந்து இருந்தால்?
அல்லாஹ் மிகப் பெரியவன்,உயிர் தப்பிய அவருடைய RIZஃK இருக்கின்ற வரைக்கும் அல்லாஹ் அவரைப் பாதுகாப்பதுபோல் எல்லோரையும் பாதுகாப்பான்.
சமீப சில நாட்களில் மட்டும் அனேக இடங்களில் இதுமாதிரி சம்பவங்கள் ஏற்பட்டிருக்கு, நமதூர் உப்பு காற்று பகுதியாகும், மின் கம்பிகள் பழுதடைய சந்தர்பங்கள் உண்டு, இதை கவனத்தில் கொண்டு ஊரில் உள்ள எல்லா மின் கம்பிகளின் இணைப்புகளையும் ஒரு நாள் முழுக்க மின் நிறுத்தம் செய்து சரிபார்க்கும்படி உயர் அதிகாரிகளுக்கு ஆதாரத்தோடு பதிவுத் தபாலில் மனு அனுப்புவதைத் தவிர வேறு வழி இல்லை.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அதிரையில் நிகழ்வது பெரும் வேதனை தருவதாக இருக்கிறது.
ReplyDeleteஜமால் காக்கா அதிரடியாக களத்தில் இறங்கினால்தான் இதற்குரிய தீர்வு விரைவில் எட்ட இயலும்.