.

Pages

Tuesday, February 11, 2014

அதிரை வங்கியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் !

அவசர தேவைக்காகவும் நெருக்கடியான நேரத்திலும் கடனுதவிக்காக பெரும்பாலானோர் நாடிச்செல்லும் இடம் வங்கிகளே. வங்கிகள் வழங்கும் கடனுதவிகளுக்கு குறிப்பிட்ட சதவீத வட்டியை நிர்ணயம் செய்து கடனாளியிடம் வசூலித்து விடுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தில் வட்டி வாங்குவதும் / கொடுப்பதும் விரோத செயல் எனக்கூறி அவற்றிலிருந்து விலகி இருங்கள் எனக்கூறுகிறது. இருந்தபோதிலும் இவற்றை கவனத்தில் கொள்ளாத பலர் நகை கடன் பெறுவதற்காக வங்கிகளுக்கு படையெடுத்து வருவது வாடிக்கையாக நடந்து வருகின்றன.

வங்கிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன. இதற்காக ஒவ்வொரு வங்கியும் அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளை மதிப்பிடு செய்து அதன் தரத்தை அறிய ஊழியர் ஒருவரை நியமனம் செய்துருக்கும். இவர்களுக்கு ஊதியமாக வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் குறிப்பிட்ட சதவீதத்தை வங்கிகள் வழங்குகின்றன.

இவ்வாறு பெறப்படும் தொகை நிர்ணயித்த தொகையை வீட கூடுதலாக வசூலிப்பதாக கூறி நமதூர் A.J நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் முஹம்மது சுல்தான் அவர்கள், பொதுமக்களின் கையொப்பமுடன் வங்கியின் தலைமையகத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். வங்கிகளில் ஏற்படும் சேவை குறைபாடுகள் குறித்து அவ்வவ்போது வங்கிகளின் தலைமையகத்துக்கும், மண்டல பொறுப்பாளர்களுக்கும் இவர் புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் புகார் குறித்து அறிந்துகொள்ள வங்கியை தொடர்பு கொள்ளும் நமது முயற்சி பலனளிக்கவில்லை.



4 comments:

  1. திருச்சியில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு இதன் நகலை அனுப்பனும். E-மெயில் கூட அனுப்பலாம்

    ASSISTANT GENERAL MANAGER
    CANARA BANK, CIRCLE OFFICE
    CITY TOWERS, NO. 1,
    ROYAL ROAD
    CONTONMENT,
    TRICHY- 620 001
    PH: 0431- 2460090
    FAX: 0431- 2410420
    M: 09443261935
    E-MAIL: pannerselvamm@canarabank.com

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. தர்ணா போராட்டம் நடத்தப்படனும் அப்பத்தான் அதிகாரிகள் இந்த முறைகேட்டை கேட்பார்கள், பொது மக்கள் இவருக்கு ஆதரவு கொடுக்கணும்.

    ReplyDelete
  4. blrlegal@canarabank.com,
    jollykuriakose@canarabank.com,
    blrco@canarabank.com,
    iyergs@canarabank.com,
    blrrlegal@canarabank.com,
    gshoolikatti@canarabank.com,
    blrrdgmsect@canarabank.com,
    ravindrabhandary@canarabank.com,
    mipdcobhi@canarabank.com,
    bjreddy@canarabank.com,
    rlcochd@canarabank.com,
    subodh_kumar@canarabank.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.