.

Pages

Tuesday, January 31, 2017

அமீரகத்தில் 'விர்ஜீன்' புதிய தொலைப்பேசி நிறுவனம் துவக்கம் !

அதிரை நியூஸ்: ஜன-31
அமீரகத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை எடிஸலாட் (Etisalat) எனும் அரசு நிறுவனம் வழங்கி வந்தது. 2006 ஆம் ஆண்டு 'டூ' (Du) என்ற தனியார் நிறுவனத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு முதல் சேவை வழங்கி வருகிறது.

இந்நிலையில், 'டூ' நிறுவனத்தின் தலைமையகமான Emirates Integrated Telecommunications Co (EITC) 'விர்ஜீன்' (Virgin) என்ற பெயரில் புதிய சேவையை வழங்க அனுமதி பெற்றுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஓமனில் வீட்டு வாடகை பிரச்சனையில் வெளிநாட்டினர் சிக்கித் தவிப்பு !

அதிரை நியூஸ்: ஜன-31
ஓமனில் பணிபுரியும் பல வெளிநாட்டினர் 3 மாதம், 6 மாதம் போன்ற குறுகியகால பணி ஒப்பந்தங்களின் கீழ் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பணி காலத்திற்கு ஏற்றார்போல் இதுவரை வாடகை வீடுகளை ஒப்பந்தம் செய்துவந்த நிலையில் தற்போது 90 சதவிகித வீட்டு உரிமையாளர்கள் 1 வருட ஒப்பந்தத்திற்கு கீழ் வீடுகளை வாடகைக்கு தர மறுப்பதால் வேறு வழின்றி இப்பிரச்சனையில் சிக்கி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

ஓமன் அரசின் சிக்கன நடவடிக்கை, பெட்ரோல் விலை வீழ்ச்சி, ஒவ்வொரு முறையும் வீட்டு வாடகையின் மீது மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 10 சதவிகித வரி மற்றும் 5 சதவிகித தரகர் கமிஷன் என செலுத்த வேண்டியுள்ளதாலும், ஒரு வருடத்திற்கு இடையில் வீட்டை காலி செய்து செல்லும் வாடகை குடியிருப்புவாசிகளுக்கு பதிலாக புதிய வீட்டு வாடகைதாரர் உடனே கிடைக்காத நிலை என்பன போன்ற பிரச்சனைகளே வீட்டு உரிமையாளர்களை இப்புதிய முடிவிற்கு தள்ளியுள்ளது.

மேலும், நீண்ட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் நிலையில் எதிர்பாராவிதமாக நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களும் தங்களது எஞ்சியகால வீட்டு வாடகையை இழக்க வேண்டியுள்ளது.

இதற்கும் மேல் ஒழுங்காக வாடகை வீடுகளை உரிமையாளர்கள் பராமரிக்காத (general maintenance) காரணத்தால் வீட்டை காலி செய்தாலும் முழுமையாக ஒரு வருட வாடகையையோ அல்லது 3 மாதத்திற்கான வாடகையையோ உரிமையாளர்களுக்கு தண்டமாக அழ வேண்டியுள்ளது என்றும் வாடகைதாரர்கள் விசனப்படுகின்றனர்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

தஞ்சை ரயில் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் கைது !

தஞ்சாவூர், ஜன-31
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த இரண்டு வருட ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறி, தற்போது பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் பொது மக்களின் மீது ஒரு பொருளாதார போரை நிகழ்த்தியுள்ளதை கண்டித்தும், அரசியல் ஆதாயங்களுக்காக நாட்டில் மக்களிடையே மதவாத வெறுப்பு சிந்தனைகளை புகுத்தி வருகிவதை கண்டித்தும், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான போராட்டத்தில் கூட அறவழிப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக வகுப்புவாத சிந்தனைகளை தூண்டியதை கண்டித்தும் தேசம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி ஜனவரி 31-ஐ கருப்பு தினமாக அனுசரித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சேக் ஜலால்  உட்பட பலர் கலந்து கொண்டு போலீசாரால் கைதாகினர்.
 

ஓமன் நாட்டின் புதிய பட்ஜெட் விமான சேவை துவக்கம் !

அதிரை நியூஸ்: ஜன-31
குறைந்த விலை டிக்கெட்டுகளை விரும்பும் பயணிகளை கவர்வதற்காக பல்வேறு நாடுகளும் பட்ஜெட் விமான சேவை நிறுவனங்களை துவக்கி நடத்தி வருகின்றன, இதில் புதிதாக இணைந்துள்ளது ஓமன்.

ஓமனின் தேசிய விமான சேவை நிறுவனமாக 'ஓமன் ஏர்வேஸ்' விளங்கி வரும் நிலையில் 'சலாம் ஏர்' (Salam Air) எனும் புதிய பட்ஜெட் நிறுவனம் ஆரம்பமாக 3 விமானங்களுடன் தனது முதலாவது உள்நாட்டு சேவையை மஸ்கட்டிலிருந்து சாலாலாவுக்கு துவக்கியது. மேலும் இந்நிறுவனத்தின் சேவை மக்கா, மதீனா, துபை மற்றும் கராச்சி நகர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்கனவே துபையிலிருந்து பிளை துபை (Fly Dubai), ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா (Air Arabia), சவுதியிலிருந்து பிளை நாஸ் (Fly Nas), குவைத்திலிருந்து ஜஸீரா ஏர்வேஸ் (Jazeera Airways) ஆகியவை பட்ஜெட் விமான சேவையை வழங்கி வருகின்றன. நமது நாடு இந்தியாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) பட்ஜெட் விமான சேவையை வழங்குகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

துபாயில் டிரைவர் இல்லா வாகன இலவச சவாரி பரிசோதனை ஓட்டம் மேலும் நீடிப்பு !

அதிரை நியூஸ்: ஜன-30
துபையில், பரிசோதனை அடிப்படையில் தானியங்கி மின்சக்தி வாகன (Autonomous electric vehicle) பரிசோதனை ஓட்டங்கள் கடந்த 2016 செப்டம்பர் 1 முதல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்தது. பிஸ்னஸ் பே (business Bay) பகுதியில் இந்த பரிசோதனை ஓட்டங்கள் சுமார் 600 முதல் 700 தூரத்திற்கு நடைபெற்று வந்தது.

6 பேர் அமர்ந்தும் 4 பேர் நின்றும் என மொத்தம் 10 பேர் ஒரே சமயத்தில் பயணம் செய்யக்கூடிய இந்த மின் வாகனத்தில் மாதந்தோறும் சுமார் 1500 பயணிகள் இலவச பயணம் செய்து பேராதரவை வழங்கி வருவதை தொடர்ந்து 2017 பிப்ரவரி 22 வரை இலவச பரிசோதனை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.

மணிக்கு 10 Km/p வேகத்தில் ஊர்ந்து செல்லும் இந்த பரிசோதனை ஓட்ட மின்சக்தி தானியங்கி வாகனம் தனக்கு முன் வேறு வாகனங்கள் 2 மீட்டர் தூரத்தில் அண்மித்தால் வேகத்தை குறைத்தும், 2 மீட்டருக்குள் இருந்தால் உடனடியாக தனது இயக்கத்தை முழுமையாக நிறுத்திவிடும்.

அதிரை நியூஸில் முன்பு இந்த வாகனம் குறித்து முன்பு இடம்பெற்ற செய்தியை வாசிக்க:

துபாயில் டிரைவர் இல்லா வாகன சோதனை ஓட்டம் இன்று முதல் துவக்கம் ! 700 மீட்டர் தூர இலவச சவாரி !!

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Monday, January 30, 2017

ஷார்ஜாவில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்தும் வசதி !

அதிரை நியூஸ்: ஜன-30
ஷார்ஜாவில் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக செலுத்த வேண்டிய நிலுவை அபராதங்கள் குறைந்தபட்சம் 1000 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் கட்ட வேண்டியவர்கள் இனி தவணை முறையில் (Installment Basis) செலுத்தலாம். இந்த சலுகை கம்பெனி வாகனங்களுக்குப் பொருந்தாது, தனிப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மேலும் தவணை முறையில் அபராதங்களை செலுத்தினாலும் உங்களுடைய வாகனத்திற்கான உரிமை பத்திரத்தை (Car Registration Renewal) புதுப்பித்துக் கொள்ள இயலும். இந்த திட்டம் அமீரகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் மாறாக வெளிநாட்டு பதிவு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள வாகனங்களுக்கு பொருந்தாது.

இந்தத் தவணைத் திட்டத்தின்படி, ஷார்ஜாவிற்கு வெளியே நிகழும் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை முழுமையாக செலுத்த வேண்டும்.

ஷார்ஜாவிற்குள் நிகழ்ந்த குற்றங்களுக்கான அபராதத்தில் 50 சதவிகிதத்தை முதல் தவணையாகவும் எஞ்சியவற்றை அந்த வருடத்திற்குள் செலுத்திக் கொள்ளலாம். எனினும், தங்களுடைய வாகனத்தை விற்க (Sell), ஏற்றுமதி (Export) செய்ய அல்லது உரிமையாளர் பெயர் மாறுதல் (Name Transfer) செய்ய விரும்புபவர்கள் அபராதங்களை முழுமையாக செலுத்தியே ஆக வேண்டும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

கடும் கோடையிலும் ஜில்லிடும் மக்கா ஹரம் ஷரீஃப் தரைத்தளம், காரணம் என்ன?

அதிரை நியூஸ்: ஜன-30
புனித உம்ரா மற்றும் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற மக்கா சென்று திரும்பிய யாத்ரீகர்கள் புனித காபாவின் தவாப் சுற்றும் தரை பகுதியில் கடும் கோடை காலத்திலும் ஜில்லென்று பாதத்திற்கு கீழ் சுகமாக இலங்குவதை அனுபவித்திருப்பீர்கள், என்ன காரணம்?

இதுவரை பரவலாக, கிரேனைட் மார்பிள்களுக்கு அடியில் செலுத்தப்படும் நீர் மற்றும் ஒருவகை ஜெல்லால் (Gel) தான் ஜில்லென்று இருக்கின்றதென என நம்பப்பட்டு வந்தது ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல.

புனித ஹரம் ஷரீஃப் எங்கும் 3 வகையான கிரானைட் மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 'தவாப்' சுற்றும் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள வெண்ணிற மார்பிள் கற்கள் 120 செ.மீ நீளமும் 60 செ.மீ அகலமும் உடையவை. இதன் உயரம் 5 செ.மீ மட்டுமே. கோடையில் கடும் சூட்டை உமிழும் சூரியக்கதிர்களை உள்ளிழுக்காமல் அப்படியே திருப்பி அனுப்பும் தனித்துவ தன்மையுடையவை இந்த மார்பிள் கற்கள். இப்படியாக கடும் சூட்டை திருப்பியனுப்புவதால் (Reflects Back) தான் புனித காபாவின் தரைப்பகுதி எப்போதும் 'சில்லென்று' சுகமாக விளங்குகிறது.

மிகவும் அரிதாக கிடைக்கக்கூடியதும், விலை மதிப்புமிக்கதுமாக இந்தக் கற்களின் பெயர் 'தஸ்ஸோஸ்' (Thassos) அல்லது 'அல்தாஸ்' (Altass) என்று அழைக்கப்படுகின்றன. இவை கிரீஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என இரண்டு புனிதத் தலங்களுக்கான நிர்வாகத் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Sources: Khaleej Times / wn.com
தமிழில்: நம்ம ஊரான்

தஞ்சை மாவட்டத்தில் பிப்.6 ந் தேதி முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில்  வருகின்ற பிப்ரவரி 6.02.2017 முதல் 28.02.2017 வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி  9 மாத குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது தொடர்பாக மருத்துவத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (30.01.2017) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி ( MR Vaccine ) அனைத்து பள்ளிகளிலும் ஆண் பெண் இருபாலர்களுக்கும் பிப்ரவரி 6 முதல் 28 வரை வழங்கப்படவுள்ளது. வைரஸால் உண்டாகும் தட்டம்மை, ஜெர்மானிய மணல்வாரி என்று அழைக்கப்படும் ரூபெல்லா என்ற இந்நோய் காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் ஆகும்.  இந்நோய் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளை உடனடியாக இந்த வகை வைரஸ் பாதிக்கும். ஆரம்ப நிலையில் உள்ள ( Early AC ) கருவுற்ற பெண்களை ரூபெல்லா தாக்கும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைகள் இருதயம், கண் பாதிப்பு, காது கேளாமை போன்ற பிறவி குறைபாடுகளுடன் பிறப்பதற்கான வாய்ப்பு உள்ளதால், இத்தடுப்பூசியினை 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

9 மாதம் முதல்15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 28 வரை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுககும் திட்டமிட்டபடி அனைத்து குழந்தைகளுக்கும் கிராம சுகாதார செவிலியர்களால் மருத்துவர்களின் மேற்பார்வையில் 1 நாளைக்கு 1000 குழந்தைகள் வீதம் இத்தகைய தடுப்பூசி வழங்கப்படவுளளது.

மொத்த நமது மாவட்டத்தில் 2005 பள்ளிகளில் 3,88,736 ஆண், பெண் மாணவர்களுக்கும் 1,725 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் 9 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் 1,36,591 குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.  இத்திட்டத்தினை சுகாதாரத்துறையுடன் இணைந்து கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை இணைந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தடுப்பூசி 5,25,327 ஆண், பெண் குழந்தைகளுக்கு போடப்படவுள்ளது. தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கும், அங்கன்வாடி மையத்தில் வைத்து கிராம சுகாதார செவிலியர்களால் தடுப்பூசி போடப்படவுள்ளது.  எனவே, பெற்றோர்கள் தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்பாமல் இத்திட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.  சம்மந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தினை சிறந்த முறையில் செயல்படுத்த ஒத்துழைப்பு தரவேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.திருவளர்செல்வி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

துபாயில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் பாதிப்பு !

அதிரை நியூஸ்: ஜன-30
நாளை (செவ்வாய்) முதல் 5 தினங்களுக்கு 5 கட்டங்களாக 865 கி.மீ தூரத்திற்கு நடைபெறவுள்ள துபை சர்வதேச சைக்கிள் பந்தயத்தை (Dubai Tour) ஒட்டி துபையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சற்று பாதிக்கபடும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.

தொடர்ந்து 4 வது ஆண்டாக நடத்தப்பெறும் இப்போட்டியின் விளைவாக துபையின் பரபரப்பான சாலைகளான ஷேக் ஜாயித் ரோடு, கிங் ஸல்மான் பின் அப்துல் அஜீஸ் ரோடு, உம்மு சுகைம், எமிரேட்ஸ் ரோடு போன்ற பகுதிகளின் போக்குவரத்து சற்றே பாதிக்கப்படும் என்றாலும் சைக்கிள் பந்தய போட்டியாளர்கள் கடந்து சென்ற பின் 10 நிமிடத்திற்குள் போக்குவரத்து சரி செய்யப்படும் என்றும் போட்டிகள் நடைபெறும் நாட்களில் இந்த சாலைகளில் காலை 10.30 மணிமுதல் மாலை 3.30 மணிக்குள் மட்டுமே இத்தகைய தற்காலிக இடர்பாடுகள் ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

16 சர்வதேச அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தப் போட்டியின் போது துபை, ஷார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைராவிலும் சில பகுதிகளில் சைக்கிள் போட்டியாளர்கள் கடந்து செல்வர். மேலும், சாலை நடுவேயுள்ள மின் விளக்கு கம்பங்களில் அந்தப்பகுதியில் எந்த நேரத்தில் சைக்கிள் பந்தய வீரர்கள் கடந்து செல்வார்கள் என்ற அறிவிப்புக்கள் இடம்பெறும்.

போட்டிகள் குறித்த விரிவான விபரங்களை அப்படியே ஆங்கிலத்தில் தருகின்றோம், வாகன ஓட்டுனர்களுக்கு பயன்படலாம்.

Day One: Tuesday: Distance: 181km

Starts: Dubai International Marine Sports Club / Ends: Palm Jumeirah

Route: Beginning from King Salman Bin Abdul Aziz Street the Dubai Tour heads straight to Shaikh Zayed Road and moves on to Jebel Ali-Lehbab Street, Dubai-Al Ain Street, Al Lisaili Street, Al Qudra Street, Emirates Road, Umm Suqeim Street, Motor City and Dubai Sports City. On its way back, the tour passes Hesa Street, Al Asayil Street, Qarn Al Sabkha Street, Al Wurood Street, First Al Khail Street, Al Naseem Street, Al Fulk Street, Abdullah Omran Tariam Street, service road along Shaikh Zayed Road, and ends at Palm Jumeirah.

Day Two: Wednesday: Distance: 187km

Starts: Dubai International Marine Sports Club / Ends: Ras Al Khaimah

Route: Setting off from King Salman Bin Abdul Aziz Street the Dubai Tour passes through Umm Suqeim Street, Al Khail Street, Ras Al Khor Street, Al Aweer Street and Emirates Road on its way to Sharjah and all the way to Ras Al Khaimah.

Day Three: Thursday: Distance: 200km

Starts: Dubai International Marine Sports Club / Ends: Fujairah

Route: Kicking off from Dubai International Marine Sports Club at King Salman Bin Abdul Aziz Street the tour passes through Umm Suqeim Street, Al Khail Street, Ras Al Khor Street, Dubai-Al Ain Street, Silicon Oasis, Academic City Street, Al Aweer Street and Emirates Road, Maliha Road, Khalifa Bin Zayed Road, and all the way to Al Aqah in Fujairah.

Day Four: Friday: Distance: 172km

Starts: Dubai International Marine Sports Club / Ends: Hatta

Route: Beginning from Dubai International Marine Sports Club on King Salman Bin Abdul Aziz Street the Dubai Tour passes through Umm Suqeim Street, Al Khail Street, Ras Al Khor Street, Aweer Street and Hatta-Oman Street all the way to Hatta.

 Day Five: Saturday: Distance: 127km

Starts: Dubai International Marine Sports Club / Ends: City Walk

Route: Setting off at Dubai International Marine Sports Club on King Salman Bin Abdul Aziz Street, the Dubai Tour passes along Umm Suqeim Street on its ways to Al Asayil Street, Oasis Street, First Al Khail Street, Meydan Street, Dubai-Al Ain Road, Oud Metha Road, Al Khail Road, Rabat Street, Tripoli Street, Mushrif Park, Al Khawaneej Road, 222 Street, Tunisia Street, Al Nahda Street, Damascus Street, Baghdad Street and Cairo Street.

The tour then moves on to Al Mamzar Beach Street, Al Khaleej Street and Baniyas Street and on its way back crosses the Al Maktoum Bridge, before passing on to Khalid bin Waleed Street, Al Musalla Street in Bur Dubai, Al Fahidi Street, Ali Bin Abi Talib Street, Ghubaiba Street, Al Falah Street, Al Khaleej road, Shaikh Rashid Road, Jumeirah Road, Umm Al Sheif Street, Al Wasl Road, Al Safa Street down to the finish point in the City Walk.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை ( ஜன. 31 ) மின்தடை !

அதிராம்பட்டினம், ஜன-30
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஜன. 31) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் மதுக்கூர் நகரம், பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி?

அதிரை நியூஸ்: ஜன-30
கனடா நாட்டின் கியூபெக் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய கலாச்சார மையம் என அழைக்கப்படும் கியூபெக் பெரிய பள்ளிவாசலில் (கனடா நேரப்படி இன்றிரவு) 8 மணியளவில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 5 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலி சம்பவத்தை ஊர்ஜிதம் செய்துள்ள போலீஸார் அதன் எண்ணிக்கையை தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கடந்த ரமலான் மாதத்தின் போதும் இந்த மஸ்ஜித் நுழைவாயிலில் பன்றியின் தலையை வெட்டிவீசி மத வெறியர்கள் தங்களின் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த நிலையில் இந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்கா ஏற்க மறுத்துள்ள அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்போம் என கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடேவ் (Justin Trudeau) அறிவித்திருந்த நிலையில் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், உலகின் எந்த நாடாவது முஸ்லீம்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் போதெல்லாம் அடுத்தடுத்த நாட்களிலேயே அந்த நாடுகளில் மிகப்பெரிய பயங்கரவாத செயல்கள் நடத்தப்பட்டு இஸ்லாமியர்கள் மற்றும் ஒரு சில தீவிரவாத குழுக்களின் மீது பழிசுமத்தப்பட்டு, முஸ்லீம்களுக்கான ஆதரவு நிலையை அந்நாடுகள் கைவிடும்படி செய்து வருகின்றனர் யூத, நஸ்ரானிய இலுமினாட்டி பயங்கரவாதிகள்.

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கனடா மக்கள் தொகையை பொருத்தவரை, 5ல் ஒருவர் அயல்நாடுகளிலிருந்து குடியேறியவர் ஆவார். மேலும் அந்நாட்டின் குடியேற்றத்துறை மற்றும் அகதிகள் நலவாழ்வுத்துறை அமைச்சராகவுள்ள அஹமது ஹூசைன் என்பவர் கூட சோமாலிய அகதி சிறுவனாக வந்து அந்நாட்டின் அமைச்சராக உயர்ந்தவர் தான்.

அமைச்சர் அஹமது ஹூசைன், கியூபெக் மாகாணப் பிரதமர் (முதல்வர்) பிலிப்பி கொல்லார்டு, கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடேவ் ஆகியோர் முஸ்லீம்களின் மீதான வன்முறை தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளதுடன் முஸ்லீம்களுக்கு தொடர் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2017 ஜனவரி ஆரம்பம் வரை சுமார் 39,670 சிரியா அகதிகளுக்கு கனடா அடைக்கலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 1034 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிபணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 15.02.2017-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் காலி பணியிடங்களாக உள்ள 362 பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கும், 672 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கும் நேரடி நியமனம் மூலம் நியமிக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், தஞ்சாவூர் மாநகராட்சி, கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காலிபணியிடங்களாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு இதற்கென நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 15.02.2017 அன்று  புதன்கிழமை  மாலை 5.45 மணிக்குள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி ஆணையர்கள் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு முன்ரே விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
     
அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக, (சத்துணவு பிரிவு) விளம்பர பலகைகளிலும் காலிபணியிட விபரம் மற்றும் இனச் சுழற்சி விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அமைப்பாளர் பணிகளுக்கான தகுதிகள்
1. அமைப்பாளர்  பணியிடத்திற்கு  பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2. கல்வித் தகுதி: பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினர்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8ம் வகுப்பு தேர்ச்சி (அல்லது)  தேர்ச்சி பெறாதவராக இருக்கலாம்.

3. வயது: பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் ஆகியோருக்கு  மனு செய்யப்படும் நாளன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்

பழுங்குடியினருக்கு மனு செய்யப்படும் நாளன்று 18 வயது ப10ர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்  

விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு மனு செய்யப்படும் நாளன்று 20 வயது ப10ர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.                                                                                                                                                                                                  
4. மாற்றுத்திறனாளியாக (உடல் ஊனமுற்றோர்) இருப்பின் மனு செய்யப்படும் நாளன்று அந்த அந்த இனத்திற்கு என குறிப்பிட்ட குறைந்தபட்ச வயது பூர்த்தி அடைந்தும் 43 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணிகளுக்கான தகுதிகள்:
1. சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
   
2. கல்வித் தகுதி: பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினர்களுக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி (அல்லது) தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும்.   பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க இருக்க வேண்டும்.

3. வயது: பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் ஆகியோருக்கு குறிப்பிட்ட மனு செய்யப்படும் நாளன்று 21 வயது ப10ர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்

மனு செய்யப்படும் நாளன்று பழுங்குடியினருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்  

விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் மனு செய்யப்படும் நாளன்று 20 வயது ப10ர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதிச் சான்றிதழ், குடியிருப்புச் சான்று, வயது சான்றிதழ், சாதி சான்றிதழ், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் இருப்பின் அதற்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்களின் சுய சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரிலோ (அல்லது) தபால் மூலமாகவோ 15.02.2017க்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
   
இதன் அடிப்படையில் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மாநகராட்சி மற்றும்  நகராட்சி ஆணையர்கள் மூலமாக நேர்காணல் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sunday, January 29, 2017

பி.எஃப்.ஐ மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு !

அதிராம்பட்டினம், ஜன-29
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( PFI ) அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கினைந்த மாவட்டத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று (29.01.2017) ஞாயிற்றுக்கிழமை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அவ்வமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் இலியாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கினைந்த மாவட்டத்தின் தலைவராக அதிராம்பட்டினம் ஏ. ஹாஜாஅலாவுதீன், மாவட்ட செயலாளராக முத்துபேட்டை எம். மர்சூக் அஹமது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

அதிரையில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தில்லா சிறப்பு மருத்துவ முகாம் !

அதிராம்பட்டினம், ஜன-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் ஏ.எம்.என்.சி புத்தபாபா அறக்கட்டளை இணைந்து மூட்டு வலி, கழுத்துவலி, இடுப்பு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தில்லா சூரிய சக்ரா ஆசனா பயிற்சி சிறப்பு மருத்துவ முகாம் அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மஹாலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம். வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜி. சந்திரசேகர், பொருலாளர் டி. முஹம்மது நவாஸ்கான் மற்றும் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் உதயகுமார், ஹாஜா பகுருதீன், வைரவன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் மூட்டு வலி, கழுத்துவலி, இடுப்பு வலி, தலைவலி, முதுகுதண்டுவலி போன்ற நோய்களுக்கு மருந்தில்லா சூரிய சக்ரா ஆசனா பயிற்சியை வர்மக்கலை நிபுணர் புத்த பாபாஜி அளித்தார். இம்முகாமில் பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.
 
 
 

மரண அறிவிப்பு ( செ.மு. முஹம்மது பாருக் அவர்கள்)

அதிரை நியூஸ்: ஜன-29
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு முஹம்மது யூசுப் அவர்களின் மகனும்,  மர்ஹும் மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருகமனும், மர்ஹூம் செ.மு. அஹமது ஜலாலுதீன், செ.மு. ஜமால் முஹம்மது,  செ.மு. அப்துல் வஹாப், செ.மு. சேக்தாவூது ஆகியோரின் சகோதரரும், டி. அப்துல் மஜீது அவர்களின் மைத்துனரும், செ.மு சேக் நசுருதீன், செ.மு அகமது அரபு ஆகியோரின் தகப்பனாரும், என்.எம்.எஸ் அஜ்மல்கான், என். அகமது அனஸ், ஏ. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய செ.மு. முஹம்மது பாருக் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை ( 30-01-2017 ) காலை 9.30 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அமெரிக்காவில் பள்ளிவாசல் தீக்கிரை ! பெண்ணுக்கு அடி உதை !!

அதிரை நியூஸ்: ஜன-29
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் விக்டோரியா நகரின் இஸ்லாமிய மையமாக திகழ்ந்த பள்ளிவாசல் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மணிநேரம் கொழுந்துவிட்டு எரிந்த பள்ளி முழுவதுமாக சாம்பலாகியுள்ளது, வேறுஅசம்பாவிதங்கள், காயங்கள் குறித்து தகவல் இல்லை.

இந்த இஸ்லாமிய மையம் இனவெறியர்களின் பல தொடர் மிரட்டல்களுக்கு நடுவே இயங்கி வந்ததுடன் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒருவன் பள்ளிச்சுவற்றில் 'வெறுக்கிறேன்' ( Hate ) என்பதை குறிக்கும் வகையில் 'H8' என எழுதிச் சென்றிருந்தான். மேலும் சிலர் கடந்த வாரம் பள்ளியினுள் புகுந்து திருட்டிலும் ஈடுபட்டதாக இம்மையத்தின் தலைவர் ஷஹீத் ஹஷ்மி தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் டெல்டா விமான நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லீம் பெண் ஒருவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக தாக்கப்பட்டுள்ளார். நியூயார்க் நகர ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் பிஸ்னஸ் வகுப்பு லவுஞ்சில் தலையில் முக்காடிட்ட நிலையில் பணியிலிருந்தவரை உதைத்தும், நாற்காலியை பிடித்துத் தள்ளியும், அசிங்கமாக திட்டியும், துரத்தியுமுள்ளான் 57 வயதுடைய ரோட்ஸ் எனும் கிழட்டு நிற வெறியன்.

அந்தப் பெண் நான் என்ன தப்பு செய்தேன் எனக் கேட்டதற்கு 'நீ ஒன்றும் செய்யவில்லை தான் ஆனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை, உங்களை எல்லாம் ஒழித்துக் கட்டத்தான் டிரம்ப் அதிபராக வந்துள்ளான்' என பைத்தியம் பிடித்தவன் போல் கூச்சலிட்டுள்ளான். இறுதியாக, கைது செய்யப்பட்டுள்ள நிறவெறியன் ஜாமினில் செல்ல விரும்பினால் 30,000 டாலர் அல்லது 50,000 டாலர் சொத்துக்களை பிணையாக வைத்துச் செல்லலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Source: AFP / Msn & rt.com
தமிழில்: நம்ம ஊரான்

வெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரிவதிக்க குவைத் எம்பிக்கள் எதிர்ப்பு !

அதிரை நியூஸ்: ஜன-29
சவுதியை தொடர்ந்து குவைத்திலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்தின் மீது வரிவதிக்க வேண்டும் என குவைத் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் வியாழன் அன்று குவைத்தியர்களை விட எண்ணிக்கையில் மிகைத்து வாழும் வெளிநாட்டினரை குறைப்பது குறித்து சிறப்பு விவாதம் ஒன்று நடக்கவுள்ள நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆதரவு நிலையை சிலர் மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிவிதிப்பது பண கடத்தலுக்கே வழிவகுக்கும் என்றும், குவைத்தியர்களுக்கு அந்நியர்களுக்கும் என இருவேறு சட்டங்களை கடைபிடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றும், தங்கள் குடும்பத்தை பிரிந்து நமது நாட்டிற்காக உழைப்பவர்களுக்கு செய்யும் கைமாறு இதுவல்ல என்றும் கடுமையான எதிர்ப்பினை எழுப்பியுள்ளனர். வரும் வியாழன் அன்று குவைத் பாராளுமன்றத்தில் சூடு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் பிப்ரவரி மாத சில்லறை பெட்ரோல் விலை உயர்வு !

அதிரை நியூஸ்: ஜன-29
அமீரகத்தில் மாதமாதம் சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலைகள் சர்வதேச மார்க்கெட் நிலவரத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2017 பிப்ரவரி மாதத்திற்கான பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகளும் டீசல் லிட்டருக்கு 6 காசுகளும் ஏற்றப்பட்டுள்ளன.

அடைப்புக்குறிக்கள் 2017 ஜனவரி மாத விலை ஒப்பீட்டுக்காக...

சூப்பர் 98 - 2 திர்ஹம் (1.91 காசுகள்)
ஸ்பெஷல் 95 - 1.89 காசுகள் (1.80 காசுகள்)
ஈ பிளஸ் 91 - 1.82 காசுகள் (1.73 காசுகள்)
டீசல் - 2 திர்ஹம் (1.94 காசுகள்)

தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 55.52 டாலருக்கும் அமெரிக்காவில் 53.17 டாலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிரை அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி மரணம் !

அதிராம்பட்டினம், ஜன-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ஆழ்குழாய் கிணறு அருகே பள்ளம் தோண்டியபோது, மண் சரிந்து விழுந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

அதிராம்பட்டினம் அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ச. ஆரோக்கியசாமி (70). இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள ஆழ்குழாய் கிணற்றிலிருந்த நீர்மூழ்கி மோட்டார் பழுதடைந்து விட்டதாம். அதை வெளியே எடுக்க முயன்றபோது நீர்மூழ்கி மோட்டார் ஆழ்குழாய்க்குள் சிக்கிக் கொண்டதாம். இதையடுத்து, அந்த மோட்டாரை வெளியே எடுப்பதற்காக ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பணியில் அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சி. நாடிமுத்து (45), கட்டையன் (35), சுந்தரராஜ் (32) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10 அடி ஆழ பள்ளத்துக்குள் நின்று மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருந்த நாடிமுத்து மீது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததாம். இதனால் மண்ணுக்குள் சிக்கிய நாடிமுத்து மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், ஏஎஸ்பி அரவிந்த் மேனன் ஆகியோர் சம்பவயிடத்தை பார்வையிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்து கிடந்த நாடிமுத்துவின் சடலம் வெளியே எடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

துபாயில் புதிய டிரைவர்களால் மட்டும் 49 பேர் மரணம் !

அதிரை நியூஸ்: ஜன-29
துபையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் 198 பேர் டிரைவர்களால் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 49 பேரின் மரணம் ஒரு வருடத்திற்கும் குறைவான அனுபவமுள்ள டிரைவர்களால் நிகழ்ந்தவை என்பதுடன் இவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த டிரைவர்கள். மேலும், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 32 பேர் மட்டுமே புதிய டிரைவர்களால் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 20 வயது முதல் 40 வயதுடைய புதிய டிரைவர்களால் இந்த விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய மற்றும் பாகிஸ்தானிய புதிய டிரைவர்களால் தலா 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இமராத்தி டிரைவர்களால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய விபத்துக்களை எற்படுத்தும் டிரைவர்களில் பெரும்பாலோர் அதிகநேரம் பணியிலிருக்கும் டிரக் மற்றும் டெலிவரி வாகன டிரைவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை 16 வருடம் அனுபவமுள்ள டிரைவர்கள் கூட 24 உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர் என்றாலும் இதுவே 2015 ஆம் ஆண்டு 18 என்ற எண்ணிக்கைக்குள் இருந்தது. விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

துபாயில் வீணாகும் உணவுப் பொருள்களிலிருந்து மாற்று எரிபொருள் உற்பத்தி !

அதிரை நியூஸ்: ஜன-29
துபையில் ஆண்டொன்றுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் (14.69 பில்லியன் திர்ஹம்) மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வீடுகள், உணவகங்கள் மற்றும் பார்ட்டிகள் போன்ற பெரிய நிகழ்ச்சிகளை நடத்துவோரால் வீணடிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை அகற்றுவதற்கு மட்டும் பகுதி ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6,000 திர்ஹம் செலவாகின்றன.

எனவே, செலவுக்கு பதில் வரவாக ஆண்டுக்கு 2,000 திர்ஹம் வருமானம் தரக்கூடிய தெருப்பகுதிகளாக மாற்றும் நோக்குடனும், எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் சுமார் 27 சதவிகிதம் சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமாக எரிசக்தியை (Bio Fuel) வழங்குவதற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2017 மார்ச் மாதத்திற்குள் துபையின் பல பகுதிகளிலும் ஈரப்பதமுள்ள வீணாகும் மற்றும் அழுகும்தன்மையுள்ள உணவுகள் சேகரிக்கப்பட்டு அதிலிருந்து மீத்தேன் வாயு மற்றும் திட மாற்று எரிபொருளையும் தயாரித்து பொதுமக்களிடமே மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளனர். இதற்காக சிறிய அளவிலான உற்பத்தி மையங்கள் துபையின் பல பகுதிகளிலும் துவக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 2017 ஏப்ரல் மாதத்திற்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறலாம் என நம்பப்படும் நிலையில் அவரவர் ஊரின் மீதும் அக்கறையுள்ள தலைவர்கள், உறுப்பினர்கள் இதுபோன்ற பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பெரு நாட்டில் மழையில் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த ஹோட்டல் !

அதிரை நியூஸ்: ஜன-29
பெரு (Peru) நாட்டின் அன்காரேஸ் மாகாணத்தின் (Angaraes province) ஹூவன்கவேலிக்கா (Huancavelica) நகரில் பாயும் சிக்ரா ஆற்றின் (River Sicra) கரையில் அமைந்திருந்த ஹோட்டல் ஒன்று, இங்கு 10 மணிநேரம் தொடர்ந்து பெய்த மழையால் வலுவழந்து ஆற்றிற்குள் நொறுங்கி முழ்கியது. எனினும், ஹோட்டல் மூழ்குமுன் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

அதேநகரில் மழையாலும், வெள்ளத்தாலும் சுமார் 5,000 வீடுகள் உட்பட பல கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Mailonline
தமிழில்: நம்ம ஊரான்
 

Saturday, January 28, 2017

புதிய உலோகம் கண்டுபிடிப்பு! விஞ்ஞான புரட்சியாக மாறுமா?

அதிரை நியூஸ்: ஜன-28
சுமார் 100 ஆண்டுகளாக விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்த்திருந்த உலகின் மிகுந்த எடை குறைவான புதிய உருமாற்று உலோகம் ( Metal ) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, அதாவது ஹைட்ரஜனை இதுவரை வாயுவாகவும், திரவ வடிவிலும் பார்த்து வந்த உலகம் உலோகமாகவுமாகவும் பார்க்கவுள்ளது.

ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மிகச்சிறிய துணுக்கு அளவில் ஹைட்ரஜன் உலோகத்தை முதன்முதலாக உருமாற்றி (transformative discovery) உருவாக்கியுள்ளதாக Science எனும் அறிவியல் இதழ் அறிவித்துள்ளது.

கோட்பாட்டளவில் (theoretically revolutionize technology) இக்கண்டுபிடிப்பு ஓர் விஞ்ஞான புரட்சியை ஏற்படுத்தும் எனவும், அதிவேக கம்ப்யூட்டர் வடிவமைப்பு (super-fast computers), அதிவேக மிதக்கும் ரயில்கள் (high-speed levitating trains), தீவிர திறன்மிகு வாகனங்கள் (ultra-efficient vehicles), மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகள் (dramatically improving almost anything involving electricity), வின்வெளி ஓடங்கள் மற்றும் பயணங்கள் போன்றவற்றில் புதிய அறிவியல் புரட்சி உண்டாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அதேவேளை சாதாரண மற்றும் அசாதாரண அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலைகளை தாக்குப்பிடிப்பதில் இப்புதிய உலோகம் தோற்றால் அனைத்தும் புஸ்வானமாகலாம்.

இந்த உலோகத்தை திரவ ஹைட்ரஜனை உடைக்கப் பயன்படும் இரண்டு வைரத்துண்டுகளை பயன்படுத்தியே ஊடுறுவி பார்க்க இயலும். உயர்அழுத்த இயற்பியல் புனித புத்தகத்தின் அழகிய பக்கங்கள் எனவும் இதைக் கூட்டாக கண்டறிந்துள்ள பேராசிரியர் இஷாக் சில்வேரா மற்றும் டாக்டர் ரங்கா டயஸ் ஆகியோர் வர்ணித்துள்ளனர். இந்த உருமாற்று ஹைட்ரஜன் உலோகம் செயற்கை வைரங்களை மிக உயர்அழுத்தத்தில் உருவாக்கும் பரிசோதனைக் கூடத்தில் நிகழ்ந்த எதிர்பாரா கண்டுபிடிப்பாகும்.

இந்த உலோக ஹைட்ரஜன் சாதாரணமாக அறையில் நிலவும் தட்பவெப்பத்தை தாங்கும் என்றும் தற்போதுள்ள மின்சார வயர்களில் மின்சாரத்தை கடத்தும் போது சுமார் 15 சதவிகிதம் மின்சக்தி இழப்பு ஏற்படுவதாகவும் உருமாற்று உலோக ஹைட்ரஜன் உற்பத்தியாகும் போது மின்சார வயர்களில் இதை மின்கடத்திகளாக பயன்படுத்தி மின்சார இழப்பை நிவர்த்தி செய்யலாம்.

எதிர்காலத்தில் வின்வெளி ஓடங்களுக்கு உலோக ஹைட்ரஜன்களை மாற்று எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் 4 மடங்கு அதிக எரிபொருளை வின்வெளிக்கு எடுத்துச் செல்லலாம் என்றும் இதன் மூலம் வின்வெளியை இன்னும் அதிக தூரம் சென்று ஆராய வழி பிறக்கக்கூடும்.

உருமாற்று உலோக ஹைட்ரஜன் மூலம் ஏவப்படும் எடை குறைந்த கலங்களை (Rockets) பல்வேறு கட்டங்களாக வின்வெளியில் நிலைநிறுத்துவதற்கு பதில் ஒரே கட்டமாக செலுத்தவும், தேவையான தரவுகளை (Payloads) கொண்டு செல்லவும் பயன்படலாம் எனவும் பேராசிரியர் இஷாக் சில்வேரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்

சவூதி ரியாத்தில் 68 வது இந்திய குடியரசு தின விழா பொதுக்கூட்டம் !

அதிரை நியூஸ்: ஜன-28
இந்திய திருநாட்டின் 68 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பணிபுரியும் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தின பொதுக்கூட்டம் பத்தாவில் உள்ள ஷிபா அல்-ஜஸீரா மருத்துவமனை அரங்கத்தில் வைத்து ஜனவரி 26, 2017 அன்று நடைபெற்றது.

ஒற்றுமை கீதத்துடன் இனிதே துவங்கிய நிகழ்ச்சிக்கு 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்- தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் செயலாளர் சகோ.பைரோஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டி தலைவர் சகோ.சர்தார் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இன்ஜினியர் ரஷீத்கான் அவர்கள் முன்னுரை நிகழ்த்தினார்.

'இந்தியன் சோசியல் போரம்', ரியாத் மத்திய கமிட்டியின் துணைத் தலைவர் டாக்டர் யூசுப் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பெரும் பங்கினையும் தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களையும் நினைவு கூர்ந்ததோடு சில வரலாற்று குறிப்புகளுடன் உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழ்சங்க தலைவர் வெற்றிவேல் , இந்தியா ஃப்ராடர்னிட்டி போரம்; ரியாத் தமிழ் பிரிவின் மாவட்ட செயலாளர் ரம்சுதீன், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக மாலிக் இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் 'குடியரசு தினமும் குடிமக்களின் நிலையும்' எனும் தலைப்பில் இந்தியன் சோசியல் போரத்தின் மத்திய கமிட்டி செயலாளர் ஜாபீர் கமால் அவர்கள் குடியரசுதினத்தின் நோக்கத்தை பற்றியும்; பாடுபட்டு பெற்ற சுதந்திர தேசத்தில் இன்றைய ஆட்சியாளர்களால் மக்களின் அடிப்படை உரிமைகளும்; ஜல்லிக்கட்டு முதலான கலாச்சாரங்களும் பறிக்கப்பட்டு கொண்டிருப்பதை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். அவரை தொடர்ந்து இந்தியன் சோசியல் போரம் கடந்த ஆறு மாதங்களாக செய்த சமூக நலப்பணிகளை பற்றி மாநிலக்கமிட்டி உறுப்பினர் அலாவுதீன் செம்மல் அவர்கள் மக்களோடு பகிந்துகொண்டார் மேலும் 'இந்தியன் சோசியல் போரத்தின்' சமூகநல பணிகளில் பொது மக்களும் தானாக முன்வந்து கலந்துகொள்ளும்படி கோரிக்கை விடுத்தார். சிறப்பாக நடந்த இந்நிகழ்ச்சியை மாநிலக்கமிட்டி உறுப்பினர் முஸ்தபா தொகுத்து வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துக்கொண்ட இந்தியன் சோசியல் போரத்தின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களின் குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டி உறுப்பினர் ஆரிப் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
 
 

துபாய் ஷாப்பிங் திருவிழா (DSF) இன்றுடன் நிறைவு!

அதிரை நியூஸ்: ஜன-28
22வது ஆண்டாக நடைபெறும் துபை ஷாப்பிங் பெஸ்டிவல் எனும் சில்லறை விற்பனை திருவிழா ‘Shop. Win. Celebrate’ என்ற பொருளின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வுக்கு உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலாவாசி என பல்லாயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் வருகை தருவர்.

இந்த வருடத்திற்கான ஷாப்பிங் திருவிழா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஆரம்பித்து கடந்த 34 நாட்களாக நடைபெற்று வந்தநிலையில் துபை ஷாப்பிங் பெஸ்டிவல் இன்று ஜனவரி 28 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா போஸ்டர் விளம்பரங்களில் காணப்படுவது போல் 'இன்று இப்படம் கடைசி'.


Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மல்லிப்பட்டினத்தில் புதிய சலூன் கடை திறப்பு !

 
மல்லிபட்டினம், ஜன-28
அதிராம்பட்டினம் அடுத்துள்ள மல்லிபட்டினம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள மரியம் வணிக கட்டிடத்தில் புதிதாக ரெயின்போ சலூன் கடை நேற்று வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் செல்வம் கூறுகையில்; கடந்த பல வருடங்களாக துபாயில் சலூன் கடையில் பணியாற்றி வந்தேன். தாயகத்தில் சொந்த கடை தொடங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. இங்கு நவீன உபகரணங்களைக் கொண்டு ஹேர் கட்டிங், ஹேர் கலரிங், ஹேர் ஸ்ரைட்னிங், பேஸ் மசாஜ், பேஸ் வாஷ், பேசியல், பேஸ் பிளிச்சிங், ஆயில் மசாஜ், பேபி கட்டிங் உள்ளிட்டவை குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான முறையில் செய்து தரப்படும். மேலும் மணமகன் அலங்காரம் குறித்த நேர்த்தில் செய்து தரப்படும். மல்லிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு: 8098981215
 
 
 
 
 
 

வெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி? : சவூதி சூரா கவுன்சில் நிராகரிப்பு !

அதிரை நியூஸ்: ஜன-28
சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு அனுப்பும் பணத்தின் மீது வரிவிதிக்க முடிவு செய்துள்ளதாக முன்பு செய்திகள் வெளியாகின என்றாலும் சவுதி நிதியமைச்சகம் இச்செய்தியை மறுத்திருந்தது.

இந்நிலையில், சவூதி அரசுக்கு ஆலோசணை தருவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயரிய ஆலோசணை சபையான 'சூரா கவுன்சில்' உறுப்பினர்களும் இத்திட்டத்தை எதிர்த்துள்ளனர். இந்தத் திட்டத்தால் பொருளாதார ரீதியாக சவூதிக்கு ஒரு பயனும் ஏற்படாது என்றும், சட்டவிரோத பணபரிமாற்றத்தையே இது ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்தனர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

புனித ஹரம் ஷரீஃப் கிரேன் விபத்து வழக்கு தள்ளுபடி !

அதிரை நியூஸ்: ஜன-28
புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற கிரேன் விபத்தால் சுமார் 109 பேர் மரணமடைந்ததுடன் சுமார் 209 பேர் காயமடையவும்  செய்தனர். இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இவர்களில் 6 பேர் சவுதியர், 2 பாகிஸ்தானியர், எஞ்சியவர்கள் கனடா, ஜோர்டான், பலஸ்தீன், இமராத், எகிப்து மற்றும் பிலிப்பைன் என தலா நாட்டுக்கு ஒருவர். இவர்கள் குறித்த தனிப்பட்ட விபரங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடந்த 2016 ஆகஸ்ட் 26 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வரும் வழக்கில், பணியில் அலட்சியம் காரணமாக மரணம் சம்பவித்தல், பொது சொத்துக்களை நாசப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு விதிகளை மீறியது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லையென மறுத்து 13 பேர் மீதான வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது. 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் 13 பேர் என பட்டியல் சுருங்கியது ஏன் எனத் தெரியவில்லை. மேலும், அரசுத்தரப்பு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யும் என தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்