.

Pages

Wednesday, January 18, 2017

ஆதார் அட்டை எடுக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை !

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி, மக்களிடம் பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 
தஞ்சாவூர் மாவட்டத்தில், ஆதார் சேர்க்கை பணி, அரசு கேபிள் 'டிவி' மற்றும் மின்னணு நிறுவனம் மூலம், நிரந்தர சேர்க்கை மையங்களில் ( PEC ) நடக்கிறது. அதில், புது ஆதார் பதிவுக்கு கட்டணம் கிடையாது. ஆனால், விரைவாக ஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி, சிலர், மக்களிடம் பணம் வசூலிப்பதாக தெரிய வந்துள்ளது. மக்களை ஏமாற்றும், அந்த நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI ) வழிமுறை வகுத்துள்ளது. அதன்படி, மக்களிடம் கட்டணம் வசூலிப்பவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம், ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஆதார் எண்ணை பெற, அரசு நிறுவனங்களால், மாநகராட்சி, தாசில்தார், நகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் உள்ள நிரந்தர சேர்க்கை மையங்களில் மட்டும், நேரில் அணுகி பயன்பெறுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.