.

Pages

Thursday, January 26, 2017

கடன் பிரச்சனையால் துபாய் சிறையிலுள்ள பாகிஸ்தானியர்களை மீட்க கிரிக்கெட் வீரர் உதவி

அதிரை நியூஸ்: ஜன-26
இந்தியாவை சேர்ந்த நகை வணிகர் பிரோஸ் மெர்ச்சண்ட் அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் கடனை அடைக்க முடியாமல் சிறைபட்ட வெளிநாட்டவர்களை மீட்க 3.6 மில்லியன் திர்ஹத்தை வழங்க ஒப்புக்கொண்டு முதற்கட்டமாக அஜ்மான் சிறையிலிருந்து 132 பேர்களை மீட்க உதவிய செய்தியை நேற்று பதிந்திருந்தோம்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷஹீத் அப்ரிதியும் முதற்கட்டமாக கடன் பிரச்சனைகளால் துபை சிறையிலுள்ள 30 பாகிஸ்தானியர்களை மீட்க தனது Afridi Foundation எனும் அறக்கட்டளை மூலம் உதவியுள்ளார். இன்னும் உதவுவதற்கும் உறுதியளித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தனது Afridi Foundation அறக்கட்டளை மூலம் மருத்துவமனைகள் கட்டித்தருதல், கல்வி உதவிகள் வழங்குதல் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர் கிணறு அமைத்துத் தருதல் போன்ற மனிதநேயப் பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரோஸ் மெர்ச்சண்ட், ஷஹீத் அப்ரிதி போன்ற மனிதநேயர்கள் அனைவரின் இம்மை, மறுமை நலவாழ்வுக்காக ஏக இறைவனை இறைஞ்சுவோம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.