அதிரை நியூஸ், ஜன-22
ஆண்டொன்றுக்கு சுமார் அரை மில்லியன் (5 லட்சம்) இந்தியர்கள், பெரும்பாலும் வர்த்தகர்கள் சென்று வரும் நாடு ஹாங்காங். பிரிட்டீஷ் காலனியாக இருந்த இந்த பகுதி தற்போது சீனாவின் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாக நீடிக்கின்றது. இந்தியர் விசா இன்றி இங்கு 14 நாட்கள் வரை தங்கி செல்லும் வசதி பிரிட்டீஷ் ஆட்சிகாலத்திலிருந்து வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நாளை (ஜன 23 – 2017) முதல் ஹாங்காங் உள்ளே வர விரும்பும் இந்திய பாஸ்போர்ட் உடையவர்கள் (Indian Passport Holders) முறையாக ஆன்லைனில் விண்ணப்பம் (Online Pre-registration) செய்து உள்நுழைய ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் இந்த புதிய விதி இந்தியர்களை மட்டுமே கட்டுப்படுத்தும், டிரான்ஸிட் பயணிகள் உட்பட. விமான நிலையத்திற்குள்ளேயே டிரான்ஸிட் ஆகிச் செல்லும் பயணிகளுக்கு விலக்களிப்பட்டுள்ளது.
ஹாங்காங் வரும் இந்தியர்கள் பலபேர் தஞ்சம் தேடுவோராக (Asylum Seekers) இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்தாலும் இந்தியா சீனா இடையே நிலவும் அரசியல் உரசல்களே இதன் உண்மை காரணமாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. ஹாங்காங் நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
ஹாங்காங் பிறப்பித்துள்ள ஆன்லைன் முன்அனுமதி 6 மாதங்கள் வரை செல்லத்தக்கவை. ஹாங்காங்கிலுள்ள இந்திய துணைத் தூதரகமும் இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதுடன் முன்அனுமதியில்லாமல் ஹாங்காங் வரும் இந்திய பாஸ்போர்ட் உடையவர்கள் விமானம் ஏற தடுக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு இது மிகவும் பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.