.

Pages

Tuesday, January 24, 2017

டெல்லி மருத்துவக் கல்லூரிக்கு 2 மில்லியன் டாலர் மதிப்பிலான நவீன மருத்துவக் கருவி அமீரகம் அன்பளிப்பு !

அதிரை நியூஸ்: ஜன-24
டெல்லியில் இயங்கி வரும் பிரசித்திபெற்ற அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் (AMU) உறுப்புக் கல்லூரியான 'ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரிக்கு'(JNMC)  அமீரக ஜனாதிபதியின் 'கலீபா அறக்கட்டளை' (Khalifa Foundation) சுமார் 2 மில்லியன் டாலர் மதிப்புடைய  Elekta Synergy Digital Accelerator என்ற நவீன மருத்துவக் கருவியை அன்பளிப்பாக வழங்கியது.

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அமீரக ராணுவப் படைகளின் துணைத் தளபதியுமான முஹமது பின் நஹ்யான் அவர்கள் இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாலும், இந்திய - அமீரகத்தின் நெருங்கிய உறவை சிறப்பிக்கும் விதத்திலும், அமீரக அரசு 2017 ஆம் ஆண்டை 'வழங்கி மகிழம் ஆண்டு' என பிரகடனப்படுத்தியுள்ளதை தொடர்ந்தும் இவ்வன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் 1975 ஆம் ஆண்டு அன்றைய அமீரக ஜனாதிபதியும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தையுமான ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுடன் இணைந்து அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்திருந்தார்.

இந்த நவீன மருத்துவக் கருவியை ஜவஹர்லால் மருத்துவக் கல்லூரிக்கு பெற்றுத் தருவதில் அமீரகத்தில் செயல்படும் இந்தியருக்கு சொந்தமான VPS Healthcare என்ற நிறுவனம் பெரும் பங்காற்றியது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.