.

Pages

Monday, January 30, 2017

தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 1034 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிபணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 15.02.2017-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் காலி பணியிடங்களாக உள்ள 362 பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கும், 672 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கும் நேரடி நியமனம் மூலம் நியமிக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், தஞ்சாவூர் மாநகராட்சி, கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சிகளிலும் உள்ள அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காலிபணியிடங்களாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு இதற்கென நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 15.02.2017 அன்று  புதன்கிழமை  மாலை 5.45 மணிக்குள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி ஆணையர்கள் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கு முன்ரே விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
     
அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக, (சத்துணவு பிரிவு) விளம்பர பலகைகளிலும் காலிபணியிட விபரம் மற்றும் இனச் சுழற்சி விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அமைப்பாளர் பணிகளுக்கான தகுதிகள்
1. அமைப்பாளர்  பணியிடத்திற்கு  பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2. கல்வித் தகுதி: பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினர்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8ம் வகுப்பு தேர்ச்சி (அல்லது)  தேர்ச்சி பெறாதவராக இருக்கலாம்.

3. வயது: பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் ஆகியோருக்கு  மனு செய்யப்படும் நாளன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்

பழுங்குடியினருக்கு மனு செய்யப்படும் நாளன்று 18 வயது ப10ர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்  

விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு மனு செய்யப்படும் நாளன்று 20 வயது ப10ர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.                                                                                                                                                                                                  
4. மாற்றுத்திறனாளியாக (உடல் ஊனமுற்றோர்) இருப்பின் மனு செய்யப்படும் நாளன்று அந்த அந்த இனத்திற்கு என குறிப்பிட்ட குறைந்தபட்ச வயது பூர்த்தி அடைந்தும் 43 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணிகளுக்கான தகுதிகள்:
1. சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
   
2. கல்வித் தகுதி: பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினர்களுக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி (அல்லது) தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும்.   பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க இருக்க வேண்டும்.

3. வயது: பொது பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர் ஆகியோருக்கு குறிப்பிட்ட மனு செய்யப்படும் நாளன்று 21 வயது ப10ர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்

மனு செய்யப்படும் நாளன்று பழுங்குடியினருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்  

விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் மனு செய்யப்படும் நாளன்று 20 வயது ப10ர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதிச் சான்றிதழ், குடியிருப்புச் சான்று, வயது சான்றிதழ், சாதி சான்றிதழ், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் இருப்பின் அதற்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்களின் சுய சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரிலோ (அல்லது) தபால் மூலமாகவோ 15.02.2017க்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
   
இதன் அடிப்படையில் தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மாநகராட்சி மற்றும்  நகராட்சி ஆணையர்கள் மூலமாக நேர்காணல் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.