.

Pages

Saturday, January 28, 2017

ஒட்டிப்பிறந்த 42 ஜோடி குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்தெடுத்து சவூதி டாக்டர் சாதனை !

அதிரை நியூஸ்:ஜன-28
சவுதி அரேபியாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை மருத்துவருமான அப்துல்லாஹ் அல் ரபீயாஹ் அவர்கள் 1990 ஆம் ஆண்டு முதல் இதுவரை 42 ஜோடி ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்து சாதனை செய்துள்ளார். தனது பணிகள் மனநிறைவை தருவதாக பெருமிதம் கொள்ளும் மருத்துவர் அப்துல்லாஹ் அல் ரபீயாஹ் தனது பசுமையான நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

1990 ஆம் ஆண்டு டிசம்பரில் முதன்முதலாக சவுதி இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்தார் அதன் பின் 1992 ஆம் ஆண்டு அதேபோன்றதொரு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சிக்கல் நிறைந்த சூடானிய குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மிகக்கடினமானதாக இருந்தது என்றும் 18 மணிநேரம் ஆபரேசன் நடந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று, மலேஷியா இரட்டையர்களான அஹ்மது மற்றும் முஹமது ஆகியோருக்கான அறுவை சிகிச்சைகள் இதற்கு முன் மலேஷியா மற்றும் பிரிட்டன் மருத்துவர்களால் முயற்சி செய்யப்பட்டு முடியாது என அப்துல்லாஹ் அல் ரபீயாஹ்விடம் வந்தவை. இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை 23.30 மணிநேரம் நீடித்ததாம்.

அதேபோல் சுமார் 10 வருடங்களுக்கு முன் போலாந்து நாட்டு இரட்டையர்களான டாரியா மற்றும் ஓல்கா கோலக்ஸ் ஆகியோருக்கான அறுவை சிகிச்சை முயற்சிகள் கூட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மருத்துவர்களால் கைவிடப்பட்டு டாக்டர் அப்துல்லாஹ்விடம் வந்தவையே.

இன்று அவர்கள் தனித்தனி சுதந்திரச் சிறுமிகளாக வளர்ந்துள்ள நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களை சந்திப்பதற்காக மறுபடியும் சவுதிக்கு வந்ததையும், அவர்கள் சந்திக்கும் வேளையில் நன்றியுணர்ச்சி தளும்பியவாறு டாக்டரை ஓடிவந்து கட்டியணைத்து கண்ணீர் சிந்தி தங்களது அன்பை பரிமாறிக் கொண்ட நிகழ்வை நினைத்துப் பூரிக்கின்றார், மேலும் இந்த சந்திப்பின் வீடியோ பதிவு உலகளவில் யூடியூப்பில் மிக மிக அதிகமாக பகிரப்பட்ட ஒன்றாகவும் அமைந்தது.

சுமார் 25 வருடங்கள் இத்துறையில் வியத்தகு பல சாதனைகள் செய்துள்ள நிலையில், மிக விரைவில் பணி ஓய்வுபெறவுள்ள டாக்டர் அப்துல்லாஹ் அல் ரபீயாஹ் அவர்கள் தனக்குப்பின்னும் இச்சேவை தொடர்ந்திடும் வகையில் இளம் மருத்துவர்கள் பலருக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.