.

Pages

Wednesday, January 25, 2017

துபாயில் 1/2 மணி நேரத்தில் 6 முறை ரேடார் கேமராவில் சிக்கியவருக்கு மன்னிப்பு!

அதிரை நியூஸ்: ஜன-25
துபையில் அதிவேகமாக சென்று அரைமணி நேரத்திற்குள் 6 முறை ரேடார் கேமராவில் சிக்கியவருக்கு முறையான காரணமிருந்ததால் மன்னிப்பு வழங்கியது துபை போக்குவரத்து காவல்துறை. அதேவேளை 7 முறை ரேடார் கேமராவில் சிக்கியவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பிரசவ வலியால் துடித்த தன் மனைவியை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் சென்றதால் அரைமணி நேரத்திற்குள் 6 முறை ரேடார் கேமராவில் சிக்கியவர் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்ததால் மன்னிக்கப்பட்டார். அதேவேளை தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அதிவேகத்தில் சென்றேன் எனக்காரணம் கூறிய 7 முறை ரேடார் கேமிராவில் சிக்கியவருக்கு அபராதம் மற்றும் இதர தண்டனைகள் வழங்கப்பட்டன. ஏனெனில், இறுதிச்சடங்குகள் நேரம் குறிக்கப்படாமல் திடீர் என ஏற்பாடு செய்யப்படுவதல்ல எனக்கூறி 'காரணத்தை' நிராகரித்தனர்.

கடந்த ஆண்டு 1628 வாகன ஓட்டுனர்கள் மிக அதிகபட்ச கரும்புள்ளிகள் பெற்றதால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதில் 169 லைசென்ஸ்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டதுடன் 24 லைசென்ஸ்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு ஓட்டுனர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களில் பலர் சிக்னலில் எல்லை கோட்டைத்தாண்டிய டிரக் டிரைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதற்கான 5 முக்கிய காரணிகள்:

1. மது மற்றும் போதை வஸ்துகளை பாவித்துவிட்டு வாகனத்தை இயக்குதல்.

2. டிராம் வாகனம் செல்லும் வழிகளில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுதல்.

3. நம்பர் பிளேட் இல்லாத நிலையில் சாலையில் வாகனத்தை இயக்குதல்.

4. காயங்கள் ஏற்படும் அளவுக்கு விபத்து நடந்துள்ள நிலையில் நிற்காமல் செல்லுதல்.

5. ஆபத்தான முறையில் டிரக்குகளை தடம்மாறி முந்திச் செல்லுதல்.

அதிரை நியூஸில் இதற்கு முன் துபையில் 1 மணிநேரத்தில் 19 முறை ரேடார் கேமிராவில் சிக்கிய பெண் பற்றி வந்த செய்தியை படிக்க:

http://www.adirainews.net/2017/01/1-19.html

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.