.

Pages

Sunday, January 22, 2017

இந்திய குடியரசு தின விழாவில் அமீரக ராணுவப்படை பங்கேற்பு !

அதிரை நியூஸ்: ஜன-22
எதிர்வரும் ஜனவரி 26 ஆம் நாள் நடைபெறவுள்ள 68வது இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமீரக பட்டத்து இளவரசரும், ராணுவ துணைத் தளபதியுமான ஷேக் முஹமது பின் நஹ்யான் அவர்கள் கலந்து கொள்கிறார்.

இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், டெல்லி ராஜ்பாத் சாலையில் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின ஊர்வலத்தில் அமீரக ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தவுள்ளனர் என்றாலும் முன்னதாக அமீரக விமானப்படையினரும் கலந்த கொண்டு சாகசம் நிகழ்த்த கோரியதை பாதுகாப்பு காரணங்களை சுட்டி மறுக்கப்பட்டது.

அமீரகம் இந்திய குடியரசு தின ஊர்வலத்தில் பங்குபெறும் முதல் அரபு நாடு என்ற பெருமையை பெறவுள்ளது, அதற்கான ஒத்திகையில் அமீரக ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன், கடந்தாண்டு நடைபெற்ற குடியரசு தின ஊர்வலத்தில் பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதை தொடர்ந்து பிரான்ஸ் ராணுவ வீரர்களும் இந்திய குடியரசு தின ஊர்வலத்தில் முதன்முதலாக பங்குபெற்ற அந்நிய நாட்டு ராணுவப்படை என்ற சிறப்பை பெற்றனர்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.