.

Pages

Wednesday, January 25, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் SLET - NET தேர்விற்கான ஒரு நாள் கருத்தரங்கம் !

அதிராம்பட்டினம், ஜன- 25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் ஆராய்ச்சித்துறை சார்பாக கல்லூரி பேராசிரியர் பணிக்குத் தேவையான ஸ்லெட்- நெட் தேர்விற்கான ஒரு நாள் கருத்தரங்கு இன்று ( 25.01.2017 ) புதன் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமையுரை நிகழ்த்தினார். இயற்பியல் துறைத்தலைவர் முனைவர்.ஏ.ஆயிஷா மரியம் வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்ககழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர்.ஏ.பஷீருதீன் சிறப்புரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் கல்லூரி அனைத்து துறையைச் சேர்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மதுரை, திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் கல்லூரிகளில் பயிலும் முதுகலை இயற்பியல் துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டார்கள். இதில் ஸ்லெட், நெட் தேர்வினை எதிர் கொள்வதற்கான விளக்கமும், பயிற்சியும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி முடிவில் பேராசிரியர் என்.சேகர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஸ்லெட் - நெட் தேர்வு எழுதுவதற்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்து இருந்ததாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் கூறினார்கள். இந்நிகழ்ச்சியை ஆராய்ச்சி மாணவி நிவேதா ஷாஜஹான் தொகுத்து வழங்கினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.